districts

img

முல்லைப் பெரியாற்றிலிருந்து பாசனத்திற்கு 18 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு

தேனி ,செப்.15-  முல்லைப்பெரியாற்றிலிருந்து 18 ஆம் கால்வாய், பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் ஒரு போக பாசன நிலங்களின் பாச னத்திற்கு தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன்,திறந்து வைத்தார்: கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின் நிலைய பகுதியில் முல்லை பெரி யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு 18 ஆம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. தேவாரம், போடி மற்றும் உத்தமபாளையத்தில் உள்ள சில பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 18 ஆம் கால்வாய் மூலம் உத்தமபாளையம் வட்டத்தில் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண் ணைப்புரம், கோம்பை, தேவாரம், தே.சிந்தலைச்சேரி, சங்கராபுரம், வெம்பக்கோட்டை, பொட்டிபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி ஆகிய கிரா மங்களைச் சுற்றியுள்ள 2045.35 ஏக்கர் பாசன நிலங்கள் மற்றும் போடி நாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, கோ டாங்கிபட்டி ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 2568.90 ஏக்கர் பாசன நிலங்கள் என மொத்தம் 13 கிராமங்க ளைச் சுற்றி உள்ள 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்  இந்நிலையில் 18 ஆம் கால்வா யில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, செப்டம்பர் 14 புதனன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர்  முரளீத ரன்  மதகை இயக்கி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். புதன் கிழமை முதல் 30 நாட்களுக்கு 98 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தந்தை பெரியாறு ,பி.டி. ஆர் கால்வாயிலும் தேனி ,உத்தம பாளையம் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கூடலூர் நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகன் துரை, தாசில்தார் அர்ஜூனன், ஆர்.டி.ஓ பால்பாண்டியன், வி.ஏ.ஓ ஜெய லட்சுமி, 18 ஆம் கால்வாய் விவசாயி கள் சங்கதலைவர் ராமராஜ்,  விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

;