districts

img

பழைய ஓய்வூதியத்தை வழங்குக! அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

திருவாரூர், நவ.26 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  வட்ட பேரவை கூட்டம் திருவாரூ ரில் நடைபெற்றது. முன்னதாக திரு வாரூர் புதிய ரயில் நிலையத்தி லிருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியாக சென்று  கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டி ருந்த தியாககளின் ஸ்தூபிக்கு மலர்  தூவி மரியாதை செலுத்தினர். கூட்டத்திற்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்  சங்க மாநில தலைவர் சௌந்தர ராஜன், வட்ட துணை தலைவர் ஜனக ராஜன், பரமேஸ்வரி, செயலாளர் தம்பிதுரை, மாவட்ட இணைச் செய லாளர் மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி பெரிய மிளகுபாறை யில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முனைவர் கா.பால்பாண்டி தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர்  ச.ஹேமலதா துவக்கவுரை யாற்றினார். மாவட்ட இணை செய லாளர் ஜீவானந்தம் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் அமுத வல்லி நன்றி கூறினார். மாநிலப் பொருளாளர் பாஸ்கரன் நிறை வுரையாற்றினார்.  மாவட்டத் துணைத் தலைவர் கா.சிவசங்கர், மாவட்டச் செயலா ளர் கோ.பழனிசாமி, மாவட்டப் பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜ், முன்னாள் மாநில செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சிராஜுதீன், மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.சகா தேவன், பெ.வெங்கடேசன், இணைச் செயலாளர் ஐ.அல் போன்சா, மாவட்ட மகளிர் துணைக்  குழு அமைப்பாளர் ப.சத்திய வாணி, மாநிலச் செயற்குழு உறுப்பி னர் க.ராமராஜ் ஆகியோர் பேசினர்.
கரூர்
சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர்  எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலை வர் சங்கர் வரவேற்றார். மாவட்ட  இணை செயலாளர் இளங்கோ,  மாவட்ட பொருளாளர் பொன்ஜெய ராம், மாநிலத் துணைத் தலைவர் மொ.ஞானத்தம்பி, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஐ.ஜான் பாஷா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜ.ஜெயராஜ் ஆகியோர் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் எம்.செல்வராணி கூட்டத்தை நிறைவு செய்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ். அன்ப ழகன் நன்றி கூறினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் நடைபெற்ற கூட்டத் திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி, மாநில பொதுச் செய லாளர் மலர்விழி, மாவட்டச் செய லாளர் வேல்முருகன், மாநில துணைப் பொதுச் செயலாளர் வாசகி ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் காமராஜ்,  முருகானந்தம் எஸ்தர் சோபா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டங்களில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண் டும். சிறப்பு காலமுறை ஊதியத் தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்து  வரும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூல கர்கள், வன பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;