districts

img

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள்

திருவள்ளூர்,டிச.10-  திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளிவாக்கத்தில் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சித்தேரி நிரம்பி யுள்ளது. மப்பேடு மற்றும் அழிஞ்சி வாக்கம் ஓடைகளில் அதிகளவில் மழை பெய்யும்போது நீர் நிரம்பி அதன் உபரி நீர் திறக்கப்படுவதால் அந்த நீரின் மூலம் போளிவாக்கம் பெரிய ஏரியும் சித்தேரியும் அதன் முழு கெ?ள்ளளவை எட்டி யுள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் மழை காரணமாக போளி வாக்கத்தில் உள்ள சித்தேரி நிரம்பி உபரி நீர் வெளியேறிய நிலையில் போளிவாக்கம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.   மேலும் மழை நீடிக்கும்பட்சத்தில் தரைப்பாலத்தில் நீர் அதிகமாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த சித்தேரியை ஆழப்படுத்தி மேலும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இதன் வழி யாக மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரு வள்ளூர் சென்று வர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.  புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு உயர்ந்தது. ஏரியின் பாது காப்பைக் கருதி புழல் ஏரியிலி ருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்து விட்டனர். இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.  மேலும், இப்பாலம் சேதமடைந்த தால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  சனிக்கிழமை முதல் சித்தஞ் சேரி, மயிலாப்பூர் என மாற்றுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர்.