பொன்னேரி, அக். 14- மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகு களில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் முதல் நிலையின் 1ஆவது அலகில் நிலக்கரி துகளாக்கும் பிரிவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.