districts

img

பழங்குடியின இருளர் தொழிலாளி கொலை: குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம்

திருவண்ணாமலை,செப்.20- திருவண்ணாமலை பழங்குடியின தொழி லாளியை அடித்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தண்டாரம்பட்டு அருகே உள்ள கடப்பன் குட்டை யில் வசித்து வந்த பழங்குடி யின தொழிலாளி பழனியை அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்கியதில் படு காயமடைந்தார். உரிய சிகிச்சை எடுக்க தவறிய தால் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தும் உறவினர்கள் வாங்க மறுத்ததால் திரு வண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யிலேயே உள்ளது. இந்த இவ்வழக்கை கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய காவல்துறை மறுத்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்தும் பழனி கொலைக்கு காரண மான மீன்வளத்துறை அதி காரி சித்ரா, சாத்தனூர் அணை மீன் ஒப்பந்ததாரர் கார்த்தி உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பழனியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் கோரிக்கைகளை வேண்டி யும் பழனியின் சொந்தமான கடப்பன் குட்டையில் செவ்வாயன்று (செப்.20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

;