districts

img

எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறப்பதா? உடனடியாக மூட அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 14- அணைப்பாளையத்தில் அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப் பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக் கோரி அனைத்துக் கட்சிகள் சார் பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அணைப்பாளை யம் நொய்யல் ஆற்று மேம்பாலம் மற்றும் ரயில்வே மேம்பாலம் அருகில் குறுகிய சாலையில் (கடை எண் 1965) டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்  கடை தொடங்கப்படுவதற்கு முன்பே எதிர்ப் புத் தெரிவித்து ஊர்ப் பொதுமக்களும், அர சியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்திருந்தனர். இந்நிலையில், இங்கு  கடை திறக்கப்படாது என்ற அரசு அதிகாரி களின் உறுதிமொழி அளித்தனர். இதை நம்பி  போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், அந்த உறுதிமொழிக்கு மாறாக, அதே இடத் தில் கடை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்களும், அர சியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, அணைப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் அனைத்து கட்சிக்கூட்டம், ஆர்.பால சுப்பிரமணியம் (சிபிஎம்) தலைமையில் நடைபெற்றது. இதில் 25ஆவது வார்டு கவுன் சிலர் தங்கராஜ்  (அதிமுக), ராம்குமார் (திமுக), ச.நந்தகோபால் (சிபிஎம்), நாக ராஜ் (காங்கிரஸ்), தம்பி வெங்கடாசலம் (கொமதேக) மற்றும் வி.பி.சுப்பிரமணியம், த.நாகராஜன், பி.செல்வி, செல்வகுமார், சிவக்குமார், மோகன், பிரபு ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடை, ரயில்வே பாலத்திற்கு மிக அருகில் அமைக் கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெருக்கடியும், பொது மக்களுக்கும், பெண் களுக்கும் கடும் அச்சுறுத்தலும் ஏற்படுத் தும். எனவே, எளிய மக்களுக்கு பாதுகாப் பும், போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வும் தர வேண்டிய மாவட்ட நிர்வாகமே, தான் அளித்த உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டுள்ளது  கண்டனத்திற்குரியது. மாவட்ட ஆட்சியர், உடனடியாக மேற்கண்ட டாஸ் மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண் டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.  மேலும், மாவட்ட ஆட்சியரை வியாழ னன்று நேரில் சந்தித்து மனுக் கொடுத்து, கடையை அகற்ற வலியுறுத்துவது எனவும், ஆட்சியரின் நடவடிக்கையின் அடிப்படை யில் அடுத்த கட்ட போராட்டங்களை முன் னெடுப்பது எனவும் முடிவு செய்யப்பட் டது.

;