districts

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக! சிபிஎம் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.16 - 200 யூனிட்டுக்கு மேல் 2 மாதங்களுக்கு மாதம் ரூ.27.50, 300 யூனிட் வரை பயன்படுத் தினால் மாதம் ரூ.72.50, 400 யூனிட் வரை  பயன்படுத்தினால் மாதம் ரூ.147.50 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். தேர்தல்  வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று திருச்சியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி காந்தி மார்க்கெட் தாரா நல்லூர் கீரைக்கடை பஜாரில் மலைக் கோட்டை பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற  போராட்டத்திற்கு, பகுதிக் குழு உறுப்பி னர் ரமேஷ் தலைமை வகித்தார். போராட்ட த்தை விளக்கி மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு  உறுப்பினர் ஸ்ரீதர், பகுதி செயலாளர் ராமர் ஆகியோர் பேசினர். அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் கிராப்பட்டி மின் வாரிய உதவி செயற்பொ றியாளர் அலுவலகம் முன்பு பகுதி செயலா ளர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி  ஆகியோர் பேசினர். பின்னர் சுமார் 500  மனுக்களை மின்வாரிய உதவி செயற்பொ றியாளரிடம் வழங்கினர்.
கரூர்
சிபிஎம் க.பரமத்தி ஒன்றியக்குழு சார்பில்  பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் க.பரமத்தி கடைவீதி யில் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செய லாளர் ஏ.ஆர்.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கந்த சாமி, சி.முருகேசன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.

;