districts

img

இட ஒதுக்கீட்டால் கல்வியின் தரம் போய்விடும் என்பது சுயநலத்தின் உச்சம் ஐஏஎஸ் அகாடமி நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கருத்து

திருச்சிராப்பள்ளி, செப்.20 - திருச்சி ராம்ஜிநகர் கே.கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள் ளது. இங்கு  வெற்றி நிச்சயம் சிறப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. விழாவுக்கு அதன் தலைவர் விஜயாலயன் தலைமை வகித்தார். இதில் நடிகர் சத்யராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி இன்றைக்கு 22 ஆயிரம் பேரை உருவாக்கியுள்ளதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. முதல் தலை முறை பட்டதாரிகளை உருவாக்குவது  முக்கியம். வசதியானவர்கள் படிப்பது பெரிய  விஷயம் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாத  குடும்பத்திலிருந்து டாக்டர், இன்ஜினியர் உரு வாவது ரொம்ப கஷ்டம். அதற்குத்தான் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதனால் கல்வியின் தரம் போய்விடும் என்று அதனை மழுங்கடிக்க முயற்சிப்பது சுயநலத்தின் உச்சக்கட்டம். நமக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. இந்த சமூகத்தின் மகிழ்ச்சிக்காக தந்தை  பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலை வர்கள் எல்லாம் பாடுபட்டனர். ஒப்பீடு இல்லா மல் நமக்கு எது சரியாக வருகிறதோ அதில்  நாம் பயணம் செய்ய வேண்டும். போட்டி, ஒப்பீடு இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்  கொள்ளுங்கள்” என்றார்.

;