பாபநாசம், நவ.29 - தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளையொட்டி, தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் தூய்மைப் பணியாளர்கள், பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பாபநாசம், அய்யம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர்கள் அய்யா ராசு, துரை முருகன், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் அனிபா மற்றும் நிர்வாகிகள், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வமுத்துக் குமரன், துணை அமைப்பாளர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.