districts

img

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வால் ரூ.120-க்கு விற்ற பிரியாணி ரூ.150 ஆக உயர்வு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 7- வர்த்தக ரீதியான சிலிண்டர்களின் விலை மார்ச் 1-ஆம் தேதி முதல் ரூ. 351 உயர்ந்துள்ளதால், திருச்சிராப் பள்ளியில் பெரிய உணவகங்கள்- சிறிய  உணவகங்களில் விற்பனை குறைந்து வருகிறது. திருச்சிராப்பள்ளியில் 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.2,326.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  நடுத்தர அளவிலான உணவகம் நாளொன்றுக்கு நான்கு 19 கிலோ  சிலிண்டர்களைப் பயன்படுத்துகிறது. பெரிய நிறுவனங்கள் நாளொன்றுக்கு பத்து சிலிண்டர்கள் வரை பயன் படுத்துகின்றன. சிலிண்டர் விலை உயர்வு ஹோட்டல் தொழிலை நலிவ டையச் செய்யுமோ என்ற அச்சம் உள்  ளது. சிலிண்டர் விலை உயர்வோடு  அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும்  சேர்ந்துகொண்டதால், அவர் களின் லாப வரம்பு  குறைந்துள்ளது.  விலை உயர்வால் தத்தளிக்கும் சிறிய உணவகங்கள், சில பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சில உணவகங்கள் ஸ்நாக்ஸ், டீ, காபி என ஒரு சில பொருட்களின் விலையை மட்டும் உயர்த்தியுள்ளனர்.  எடமலைப்பட்டிபுதூரில் உள்ள பிர சித்தி பெற்ற உணவகத்தில் ஹைதரா பாத் பிரியாணி, சிக்கன் பிரியாணி ஒரு  பிளேட் ரூ.120-ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடையின் உரி மையாளர் காதர் அஹமது கூறுகை யில், “அதிகரித்து வரும் செலவுகளால் நாங்கள் தவித்து வருகிறோம்” என் றார். திருச்சிராப்பள்ளி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் எஸ்.சுந்தரேசன் கூறுகையில், கடந்த  சில மாதங்களாக தொடர் விலையேற் றம், காய்கறிகள், சமையல் எண்ணெய் விலை உயர்வால் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் சில உணவ கங்கள் விலையை உயர்த்தியுள்ளன.  வேறு சிலர் இந்த மாதம் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது.” என்றார். கன்டோன்மென்ட்டில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான உணவகத்தின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்க மாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு நாளும் உணவுப் பொருளின் விலையை நான் தீர்மானிக்க முடியாது. கட்டட வாட கையும் அதிகரித்து விட்டது. விலை  உயர்வுடன் தினம்தோறும் போராடி  உணவகத்தை நடத்த வேண்டியுள் ளது” என்றார். மத்திய பேருந்து நிலையம் அருகே  டீ கடை நடத்தி வரும் குமரன் என்பவர் கூறுகையில், “ஒன்று அல்லது இரண்டு  நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிலிண்டர்  தேவைப்படுகிறது. நான் வாடிக்கையா ளர்களை இழக்க விரும்பவில்லை. சிலிண்டர் விலை உயர்வால் எனது லாபம் குறையும். இருப்பினும், விலை  தொடர்ந்து உயர்ந்தால், கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற் படும்’’ என்றார்.

;