districts

மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுமா? ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க சிஐடியு கோரிக்கை

தஞ்சாவூர், மே 11 - தமிழகத்தில் மீனவர்களுக்கு வழங்கப்ப டும் தடைக்கால நிவாரணத்தை தாமத மின்றி வழங்க வேண்டும் என மீன்பிடித் தொழி லாளர்கள் சங்கம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்ட மீன்பிடித் தொழிலா ளர்கள் சங்கம் (சிஐடியு) ஆலோசனைக் கூட்டம், சேதுபாவாசத்திரத்தில் சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோ கரன் தலைமையில் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் குத்புதீன், மாவட்டச்  செயலாளர் கர்த்தர், சங்க நிர்வாகிகள், சேது பாவாசத்திரம், கழுமங்குடா, மல்லிப்பட்டினம் பகுதி மீனவர்கள் கலந்து கொண்டனர்.  மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்.15 ஆம்  தேதி தொடங்கி ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட நிவாரணம் ரூ.5 ஆயிரம் என்பது, தற்போதைய விலை வாசி உயர்வுக்கு ஏற்ப மீனவர்களுக்கு போது மானதாக இல்லை. எனவே, தடைக்கால நிவாரணத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி, தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;