districts

ஹிஜாப் விவகாரத்தில் இரு மாறுபட்ட தீர்ப்புகள் மீண்டும் விரிவான அமர்வில் விசாரிக்க வேண்டும் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பாபநாசம், அக்.15 - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும்,  பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவில், இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முரண்பட்ட  தீர்ப்பை வழங்கியுள்ளது.  இரு நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் சுதான்சு துலியா ஹிஜாபிற்கு தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  ரத்து செய்து வழங்கியுள்ள தீர்ப்பு நியாய மானதாக உள்ளது. பீஜோ இமோனுவல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்  அடிப்படையில் நீதியரசர் தூலியா ஹிஜாப்  அணிவதை தடை செய்வதற்கு முகாந்திரம் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள் ளார். பெண் குழந்தைகள் கல்வி கற்பதின்  அவசியத்தை தனது தீர்ப்பில் முன்னிலைர் படுத்தியுள்ள நீதியரசர் தூலீயா, பெண் கல்விக்கு அரசோ சமுதாயமோ எவ்வித முட்டுக்கட்டையும் போடக் கூடாது என்று அறி வார்ந்த நிலைப்பாட்டை எடுத்து ஹிஜாப் மீதான தடையை நீக்கியுள்ளார். ஆனால் நீதியரசர் ஹேமந்த் குப்தா, இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்து  கர்நாடக உயர்நீதிமன்றம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடை சரியென  தீர்ப்பு வழங்கியுள்ளார். இதன் விளைவாக,  இந்த வழக்கை மற்றொரு விரிவான அமர்வு முன்பு விசாரணைக்கு அனுப்புவதற்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும் சூழல்  ஏற்பட்டுள்ளது.  நீதிபதி தூலியா தனது தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளது போல், ஹிஜாபிற்கு தடைவிதிப் பது பெண் கல்விக்கு போடப்படும் முட்டுக்கட் டைதான். இதனை நீக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த கர்நாடக முஸ்லிம் மாணவியர்களின் கல்வி  முன்னேற்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு பேரிடராகும். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்ற முதுமொழிக்கேற்ப இன்றைய தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் விரிவான அமர்வில் விசாரிக்கப்பட்டு விரைந்து  தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டு  கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;