districts

img

கொள்ளிடம் ஆற்றில் பாலம் உள்வாங்கி விழுந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் 3 நாட்களில் முடியும்

கும்பகோணம், செப்.21 - திருப்பனந்தாள் வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கூட்டு குடி நீர் குழாய் தாங்கு பாலம் உள்வாங்கிய இடத்தில் ரூ.40 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே வாண்டையார் இருப்பு  கொள்ளிடம் ஆற்றில் வேளாங்கண்ணி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயை தாங்கி  நிற்கும் சிறிய பாலம் கடந்த செப்.18 ஆம்  தேதி இரவு சுமார் 50 அடி நீளம் உள் வாங்கி சேதமடைந்தது. இதனால் நீரேற்றும் நிலையத்தில் தண்ணீர் விநி யோகம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் குடிநீர் குழாய்க்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் அந்த ரத்தில் தொங்கிய நிலையில் பாலம்  காணப்பட்டது. இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள 500-க்கும்  மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் விநி யோகம் தடைபட்டது. இதையடுத்து அம்மையப்பன் கொள்ளிடம் ஆற்று ஆழ்துளை கிணற்றிலிருந்து தினமும் 85  லட்சம் லிட்டர் வீதம் மாற்று ஏற்பாடாக குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் இடிந்து விழுந்த பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கி,  குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறி யாளர் முரளிதரன், செயற்பொறியா ளர்கள் கருணாகரன், லோகநாதன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொ றியாளர் முத்துமணி மற்றும் அலுவ லர்கள் கொள்ளிடம் ஆற்று ஆழ்துளை  கிணற்றிலிருந்து மாற்று ஏற்பாடு செய்து, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர்.  இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கூறுகையில், “வாண்டை யார் இருப்பு ஆழ்துளை கிணற்றி லிருந்து தினமும் 125 லட்சம் லிட்டர் குடி நீர் விநியோகம் நடைபெற்று வந்தது.

 இப்போது சிறிய பாலம் பழுதடைந்த தன் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு அம்மையப்பன் பகுதியிலிருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. பாலத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வசதியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடும் தண்ணீரை குறைக்க வேண்டுமென பொதுப்பணித் துறையினரை கேட்டுள் ளோம். பாலம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 9 அலுவலர்கள் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  திருச்சியில் இருந்து ராட்சத இரும்பு  தூண்கள் மற்றும் பாலம் வடிவிலான கருடர் ஆகியவை 25 மீட்டர் நீளம் மற்றும் ஒன்றரை மீட்டர் அகலத்தில் வர வழைக்கப்பட உள்ளது. முதல் பணி கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்ட மாக மணல் மூட்டைகளை அடுக்கி பணி கள் மேற்கொள்ள வசதியாக ஆற்றில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் ரூ.40 லட்சம் மதிப்பில் 3 நாட்களில் மேற்கொள்ளப் பட்டு செப்.24 ஆம் தேதி முதல் இயல்பு நிலையில் செயல்படுத்தப்படும்” என்றனர்.

;