districts

img

அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் சிபிஎம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், செப்.4 - அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம், மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு - தெருமுனை ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை மாலை, அம்மாபேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு, சிபிஎம் நகரச் செயலாளர் வி.ரவி தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.மாலதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், “உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் டாஸ்மாக் கடை வைப்பதை கைவிட வேண்டும். அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்புத்துறை அலுவலகம் அமைத்து தர வேண்டும். அம்மாபேட்டை சின்னக்கடைத் தெருவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவித்திட வேண்டும். புத்தூர் நடுப்பட்டி சுடுகாட்டுக்கு பாதை, கொட்டகை அமைத்து தர வேண்டும். வடபாதி புத்தூரான் வாய்க்காலுக்கு அருகிலுள்ள வாய்க்காலை, தூர்வாரி வடிகால் வசதி செய்து தர வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

;