districts

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் 154 பேருக்கு பணி ஆணை வழங்கல்

தஞ்சாவூர், ஏப்.17 - பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் 154 மாணவ, மாணவிகள் பல்வேறு நிறுவனங்களால் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  கடந்த மூன்று நாட்களாக பட்டுக் கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை  வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த லூகாஸ், டிவிஎஸ் பிரைவேட் லிமிடெட், வெபா சிஸ்டம்ஸ் மற்றும் சிம்சன் அண்ட் கோ  பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங் கள் கலந்து கொண்டன.  வேலைவாய்ப்பு முகாமுக்கு பட்டுக் கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்  பி.சீனிவாசன் தலைமை வகித்தார். வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சதீஷ்குமார் வரவேற்றார். லூகாஸ் டிவிஎஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த  மனிதவள மேலாளர் ரவிக்குமார், வெபா சிஸ்டம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி வெங்க டேஷ், சிம்சன் அண்ட் கோ லிமிடெட் நிறுவன  மனிதவள மேலாளர் ராஜா ஆகியோர் மாண வர்களை தேர்வு செய்தனர். நிறைவாக கல்லூரியின் வேலைவாய்ப்பு துறை அலுவலர்  ஏ.அமலோற்பவச் செல்வி நன்றி கூறினார்.  இதில் இயந்திரவியல், இயந்திர மின்னணு வியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும்  கணினித் துறையைச் சேர்ந்த 220 மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். இதில் 154  பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;