தஞ்சாவூர், ஏப்.12- தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவிஞர் அறிவு மதி, “சங்கத் தமிழில் குறும்படங் கள்” என்ற தலைப்பில் பேசினார். திருச்சி சிவா எம்.பி., “பெண்ணினம் போற்றுவோம்” என்ற தலைப்பில் பேசியதாவது; தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டினை அடுத்த தலை முறையினருக்கு கொண்டும் செல் லும் வகையிலும் அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை இளை ஞர்கள் மத்தியில் நடத்திட முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். சமூகத்தில் பெண்கள் அனைத்து இடங்களில் நிறைந்து இருக்க வேண்டும். ஆதி காலத்தில் தலை மை பொறுப்புகளிலும், குடும்ப பொறுப்புகளிலும் பெண்கள் தான் இருந்துள்ளனர். பிறகு பல்வேறு வளர்ச்சிகளுக்கு பிறகு ஆண் களின் ஆதிக்கம் செலுத்த துவங்கி, பெண்கள் கட்டுப்பட்டவர்களாக வும், அடிமையாகும் மாறிய அவல நிலை இருந்து வருகிறது. இன்றைக்கு வளர்ந்த சமூ கத்தில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதா ரத்தில் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றும் முயற்சிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என்றெல்லாம் இருந்தாலும், பெண்களுக்கான நிலைமை மாறிவிட்டதா என்றால் இல்லை. தற்போது கூட பெண் பிள்ளை பிறந்த கவலையுடன் அதை எதிர்க்கொள்ளும் பெற் றோர்கள் இருக்கிறார்கள். மனிதனுக்கு உடலில் இடது, வலது கைகள் எவ்வளவு முக்கி யமோ, சமூகத்தில் ஆணும், பெண் ணும் சமம் தான் என்ற நிலைமை வர வேண்டும். பெண் என்பவளை தெய்வமாக போற்றி வணங்கி வருகிறார்கள். நம்மை தாங்கி இருக்கும் பூமியை பெண் என்கிறார்கள்.
நமது நாட்டில் நதிகள், நாடுகள் எல்லாம் பெண்ணின் பெயர்களில் தான் உள்ளது. இது போதாது, பெண்களுக்கு எல்லாவற்றிலும் உரிமை கிடைத்து விட்டதா என கேட்டால், இல்லை என பதில் சொல்லுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். வெறும் சட்டங்க ளால் பெண்ணின் உரிமையை பெற்று விட முடியாது. அதற்கு பெண்கள் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மக்களின் மனதில் மாற்றம் ஏற் படும் போது தான். முழுமையான உரிமை பெண்களுக்கு கிடைக் கும். பெண்களுக்கு எந்த இடத்தி லும், பெண் என்ற தாழ்வு மன பான்மை வரக்கூடாது. எதை செய் தாலும் நிறைவாகவும், பக்குவ மாகவும் செய்ய கூடிய ஆற்றல் பெண்களுக்கு தான் உண்டு. எனவே, சமூகம் குடும்ப பொறுப்பை பெண்களிடம் கொடுத்து விட்டு, ஆண்கள் பொருள் ஈட்டும் பணிக் காக சென்று விட்டனர். ஆனால், இன்றைக்கு பெண்கள் அந்த இடத்திற்கும் வந்து விட்டனர். சங்க காலத்தில், 32 பெண் புலவர்கள் தமிழினத்தில் இருந்துள்ளனர். வேறு எந்த மொழியிலும் பெண் புலவர்கள் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. இன்றைக்கு பல பெண்களுக்கு பல்வேறு திறமைகள் இருந்தா லும், சமூகத்தில் கல்வி, வேலை, பொருளாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. தனி திறமைகளை ஊக்கப்படுத்துவது கிடையாது. பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஒடுக்குமுறை உள்ளது. பெண்கள் இதை கூற தயக்கம் காட்டுகின்றனர். பெண் களின் உரிமை பறிபோவதை கூட வெளியில் சொல்ல முடியாத நிலை யில் தான் உள்ளனர். பெண்களுக்கு சீர்வரிசையின் போது பாத்திரத்தில் பெயர் எழுதி கொடுப்பார்கள். சொத்து பத்தி ரத்தில் எழுதி கொடுக்கும் அள விற்கு வளர்ந்து இருக்கிறோம். முத லில் பெண்களுக்கு சொத்து சம உரிமை என நபிகள் நாயகம் தெரி வித்தார். பின்னர் அதை மறைந்த முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி னார். சிப்பாய் புரட்சியின் போது பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
வேலுநாச்சியார் ஆங்கிலே யர்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அவர்களின் ஆயுத வலிமைக்கு எதிராக வேலுநாச்சி யார் படை பின்தங்கியது. அப்ா போது, அவரின் படையில் இருந்த குயிலி என்ற பெண், சில பெண்களு டன் ஆங்கிலேயர்களின் கோட் டைக்கு மெல்ல சென்று, தனது உட லில் நெய்யை ஊற்றி, தீ வைத் துக்கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கிக் குதித்து, அவர் களை பதறச் செய்தவர். வேலு நாச்சியாரை வெற்றி பெற வைத்த வர். பெண்களுக்கான உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அது கிடைக்கவிட்டால், போராடிப் பெறுங்கள். பெண் உரிமைக்காக இந்த ஆட்சி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண்ணி னம் இல்லாமல் சமூகம் இல்லை, குடும்பம் இல்லை, வாழ்க்கை முழு மை பெறாது” இவ்வாறு அவர் பேசினார்.