districts

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

விழுப்புரம், பிப்.5- விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனி மாறுதலை அடுத்து புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப் பேற்று கொண்டார். விழுப்புரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக  ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதனன்று (பிப்.5) பொறுப்பேற்றுக்  கொண்டார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளா கத்தில், மாவட்ட ஆட்சியர்  மரக்கன்றினை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட பலர் உடனிருந்தனர்.