districts

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்

திருவள்ளூர், ஜூன் 19- 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் முதற்கட்டமாக திருவள்ளுர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பெருந்தொற்றுலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு ஏதுவாக தடுப்பூசிகள் செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதையொட்டி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வரிசை மற்றும் இதர வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்திடும் பொருட்டு, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு திருவள்ளுர் ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜுன் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் பி;ற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

;