districts

சென்னையில் உஸ்பெகிஸ்தான் பெண்ணுக்கு மூளையில் சிக்கலான அறுவை சிகிச்சை

சென்னை, செப். 21- உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 47 வயதுள்ள ஒரு பெண் நோயாளிக்கு ஆழமாக  மூளையை தூண்டும் டிபிஎஸ் என்ற மிக சிக்கலான அறுவை சிகிச்சையை சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனை  வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது.   இந்த பெண் Obsessive Compulsive Disorder (OCD) என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் மூளையை செயற்கையாக தூண்டிவிடும் சிகிச்சை தேவைப்படுவதாக அந்நாட்டு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதை யடுத்து சென்னை கொளத்தூரில்  உள்ள பிர சாந்த் பல்நோக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட அந்த பெண்ணிற்கு நவீன மருத்துவ சாதனங்க ளின் உதவியோடு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூளை நரம்பியல் மருத்துவர், உளவியல் மருத்துவர், மயக்கவியல் நிபுணர் மற்றும் அனுபவம் மிக்க செவிலியர்கள் அடங்கிய குழுவினரால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.  அறுவைசிகிச்சையின் காரணமாக  நோயாளி நன்கு குணமடைந்துள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாக  மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறையின்  தலைமை மருத்துவர் விக்னேஷ்வர் ரவிசங்கர் கூறினார்.  நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள இத யத்தில் பேஸ்மேக்கர் பொருத்தப்படுவதற்கு நிக ரானது மூளையில் செய்யப் படும் டிபிஎஸ் எனப்படும் மருத்துவ செயல்முறை என்றும் அவர் தெரிவித்தார்.

;