districts

மெட்ரோ ரயில் பராமரிப்பு பணியால் மக்கள் அவதி

சென்னை, ஆக.4- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்க ளில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக ரயில் சேவை அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. விம்கோ பணிமனையிலிருந்து விமான நிலையம் நோக்கிச்செல்லும் மெட்ரோ ரயிலில் வியாழனன்று காலை பழுது ஏற்பட்ட தாக அறிவிப்பு வெளியிடப்பட்டு காலை 8.30 மணிமுதல் 9.45 வரை ரயில்சேவை  நிறுத்தப்பட்டது. இதனால் விமானநிலை யம், உயர்நீதிமன்றம், சென்ட்ரல், சைதாப் பேட்டை மார்க்கம் நோக்கிச்செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக் குள்ளாகினர். இதுகுறித்து பயணிகளுக்கு எந்த முன்னறிவிப்பு அளிக்கப்படுவதில்லை. மேலும் பயணிகள் டிக்கெட் எடுக்காமல், பயண அட்டையில்  பயணிக்கும் முறையில்    அட்டைகளை புதுப்பிக்க, காலம் நீட்டிக்க   கவுண்டர்களில் ஆளில்லா பயண அட்டை  சான்றளிக்கும்  கருவிகள் பழுதடைந்துள்ள தாக கூறப்படுகிறது. சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலை யத்தில் உள்ள இந்த நவீன தானியங்கி இயந்திரம் செயல்படவில்லை. இதுபற்றி பயணிகள் கேட்டபோது, இந்த மெஷின் பழுதாகி விட்டதாகவும், சரிசெய்ய 3 நாட்கள்  ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதேபோல், எல்ஐசி உள்ளிட்ட பல மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த மெஷின் பழுதடைந்துள்ளது. இதனால், பயணிகள் சிரமப்பட்டனர்.

;