districts

எம்.சி.ராஜா விடுதியில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதிஒதுக்கீடு

சென்னை, ஜன. 27 - நந்தனம் எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் 44.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 மாடி கொண்ட கூடுதல் விடுதி ஒன்று கட்டப்பட உள்ளது. சென்னை நந்தனத்தில் எம்.சி.ராஜா ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி வளா கத்தில் காலியாக உள்ள சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் 10 மாடி கொண்ட புதிய விடுதி ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்காக வெளியிடப் பட்டுள்ள அரசாணையில், எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், காலியாக உள்ள இடத்தில், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கூடிய புதிய விடுதி நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. ஒரு லட்சத்து ஆயிரத்து 101 சதுர அடி பரப்பள வில் அமைய உள்ள இந்த கட்டி டத்தில் 121 அறைகள் இருக்கும். 484 மாணவர்கள் தங்கி படிக்க முடியும். இதற்காக 44.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.