districts

வரதராஜ பெருமாள் கோயிலின் 311.23 ஏக்கர் நிலங்கள் மாயம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம்

காஞ்சிபுரம், செப். 14- காஞ்சிபுரம் வரதராஜபெருமாள்  கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 311.23 ஏக்கர்  நிலங்கள் மாயகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என  அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள பலநூறு ஏக்கர் நிலங்கள் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் விவரம் அடங்கிய பாதாகையை கோயில் நிர்வாகம் பக் தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்க வேண்டும், நிலங்களில் இருந்து பெறப்படும் வாடகை  பாக்கி விவரங்கள் எவ்வளவு என்பது குறித்து கோவில் வளாகத்தில் விளம்பரப் பலகையை வைக்க  வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. அதன்படி கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பல முக்கிய கோவில்களில் பக்தர்கள் அறிந்து  கொள்ளும் வகையில் நிலங்கள் எவ்வளவு, வாடகை  பாக்கி எவ்வளவு நிலுவையில் உள்ளது மற்றும் சொத்து  விவரம் அடங்கிய பாதாகைகள் வைக்கப்பட்டது.

ஆனால் வரதராஜபெருமாள் கோவிலில் மட்டும் இது போல் சொத்து விவரம் அடங்கிய பாதாகைகள் வைக்க வில்லை. இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த அ.டில்லி பாபு என்பவர்  கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம்  தேதி  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த  விண்ணப் பத்தின் மீது கோவில் நிர்வாகம் அளித்த பதில் கடிதத்  தில் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக 448.43 ஏக்கர் உள்ளது என தகவல் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி  (16.8.2021) அண்ணாமலை என்பவர் தகவல் அறியும்  உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட தகவலுக்கு வரதராஜ பெரு மாள் கோவில் நிர்வாகம் கோவிலுக்கு சொந்தமாக 177.20 ஏக்கர் நிலங்கள் மட்டும் உள்ளது என தகவல்  அளித்துள்ளது. இருவேறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  கேட்ட விண்ணப்பங்களுக்கு நிலங்கள் குறித்து முன்  னுக்குப் பின் முரணான தகவலை கோவில் நிர்வாகம்  அளித்துள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்ன வென்றால் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய 311.23  ஏக்கர் நிலங்கள் மாயமாகி உள்ளது என்ற தகவலும்  தற்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ் வெளிவந்துள்ளது.  இது பொதுமக்களையும் பக்தர் களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

;