districts

கோட்டை நோக்கி மின்ஊழியர்கள் இன்று பேரணி

சென்னை, மார்ச் 27- தமிழ்நாடு மின்வாரியத்தில் பணி யாற்றக்கூடிய ஊழியர்கள், பொறி யாளர் மற்றும் அதிகாரிகளின் பல்வேறு கோரிக்கைகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத நிலையில் தமிழக முதல் வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் 28 ( செவ்வாயன்று)  கோட்டை நோக்கி 10,000-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பேரணியாக செல்கி றார்கள். முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப் படையில் பதவிகளை அனுமதித்திட வேண்டும். 56,000-ம் காலிப்பணி யிடங்களை நிரப்பி பணியாற்றும் ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும். நிரந்தர தன்மை  வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் முறைக்கு விடக்கூடாது. Redeployment முறைக்கு செல்லக்கூடாது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை பறிக்க கூடாது.அரசானை 100 அடிப்படையில் பணியாளர்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய, முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திட வேண்டும். .மின்வாரிய பணியாளர்களுக்கு 01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். மின்வாரிய பணியாளர் களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெறவுள்ளது.  இந்த  கோரிக்கைகள் மீது வாரிய நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத கார ணத்தால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த  பேரணி நடைபெறவுள்ளதாக தமிழ் நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளரும் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் நிர்வாகி யுமான எஸ். இராஜேந்திரன் தெரி வித்துள்ளார். பேரணி மார்ச் 28 காலை 10 மணிக்கு மின்வாரிய தலைமை அலு வலகம் (அண்ணாசாலை) துவங்கி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நிறைவு பெறும். அதன்பின் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறி யுள்ளார்.

;