districts

img

புதுச்சேரிக்குள் நுழைய தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

கடலூர், மே 13- தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வரப்படு கிறது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பகல் 12 மணி வரையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பொது போக்கு வரத்திற்கு அனுமதி வழங்கப்  படாத நிலையில் சாலைக ளில் கார், இருசக்கர வாக னங்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படு கிறது. இதனைக் குறைத்திடும் வகையில் கடலூரிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ள புதுச்சேரி எல்லைப்  பகுதியான கன்னியக்கோயி லில் புதுச்சேரி காவல் துறை யினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக பதிவெண் கொண்ட கார்,  இருசக்கர வாகனம் ஆகிய வற்றிற்கு அனுமதி மறுத்த னர். மதியம் 12 மணிக்குப் பின்னர் மருத்துவத் தேவைக்  காக மட்டுமே அனுமதிப்ப தாக கூறினார். கண்டிப்பாக செல்ல வேண்டும் என்பவர்க ளிடம் அபராதம் வசூலித்து அனுப்பி வைத்தனர். கொரோனா பரவல் புது வையில் அதிகமாக பரவி  வரும் நிலையில் தமிழகத்தி லிருந்து காரணம் இல்லாமல் வருபவர்களை தடுத்திட வாகன தணிக்கையை மேலும் அதிகப்படுத்த உள்ளதாகவும் புதுச்சேரி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், பெரும்பாலான வாகனங்கள் கன்னியக்கோயிலிருந்து திருப்பி விடப்பட்டன. இத னால், கன்னியக்கோயி லுக்கு அடுத்ததாக உள்ள தமிழக பகுதிகளுக்கு அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் செல்வதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது.

;