districts

img

கொரோனா நிவாரண தொகை ஒரு லட்சம்

எல்ஐசியின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடும் ஐபிஓ முடிவை திரும்பப் பெற வேண்டும், நேரடி பாலிசி விற்பனையை கைவிட வேண்டும், பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். கொரோனா நிவாரண தொகை ஒரு லட்சம் வழங்க வேண்டும், பெருந்தொற்றில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும், சென்ற ஆண்டு கொடுத்த முன்பணத்தை நிவாரணமாக மாற்றி அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எல்ஐசி கிளை 2இன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்கத்தின் கிளைத் தலைவர் வேணு தலைமை தாங்கினார். வேலூர் கோட்டத் தலைவர் அன்பரசி ஜூலியட், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பழனி, கொளஞ்சியப்பன், நிர்வாகிகள் ரங்கநாதன் சரவணன் ஆகியோர் பேசினார். அதேபோல் விழுப்புரத்தில் கிளைத்தலைவர் எல்.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சம்பத், கிளை செயலாளர் டி.புண்ணியமூர்த்தி, நிர்வாகிகள் ஜெயபால், எஸ்.மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;