districts

இ-சேவை மையம் தொடங்க ஆட்சியர் அழைப்பு

விழுப்புரம், மார்ச் 24- விழுப்புரம் மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளது. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in//https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும்.  விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 14 அன்று இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம், நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம். இவ்விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் பர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலமாக வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;