மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி, அம்மன் நகர் கிளைச் செயலாளர் எம்.குமார் - பழனியம்மாள் இணையரின் மகள் கே.இலக்கியா - கே.தேவக்குமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிறன்று (செப்.17) நங்கநல்லூரில் நடைபெற்றது. கட்சியின் தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஏ.நடராஜன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி பேசினர்.