districts

img

பழங்குடியின மக்களின் மருத்துவ வாகனத்தை தனிநபர் ஆக்கிரமிப்பதா மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்

பொள்ளாச்சி, ஜுன் 12-

பொள்ளாச்சி அடுத்த ஆனை மலை வட்டாரத்திற்குட்பட்ட சேத்து மடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 ஆண்டுகளாக பழங்குடியின மக்க ளின் மருத்துவ பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட வாகனத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து வருவதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின்  கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ். பரமசி வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, ஆனைமலை வட்டா ரத்திற்குட்பட்ட சேத்துமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழங்குடி யின மக்களின் மருத்துவ பயன்பாட் டிற்காக  நான்கு சக்கர வாகனம் 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சுகா தார துறையால் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், சேத்துமடை, அண்ணா நகர், நாகரூத்து 1 மற்றும் 2 செட் டில்மென்ட், சர்கார்பதி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலுள்ள பழங்குடியின மக்களின் அவசரகால மருத்துவ பயன்பாட்டிற்கும், பேறுகாலம் மற் றும் கர்ப்பிணி பெண்களுக்கான மாத மாதம் பரிசோதனைகளுக்கும், வயது மூப்படைந்த முதியவர்களின் மருத் துவ பயன்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்து, சிகிச்சை முடிந்தவர்களை வீடுகளில் சேர்க்கவும் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் தற்பொழுது வரை ஒரு முறை கூட பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்காக பயன் படுத்தவில்லை. மாறாக தனிநபர் பயன் பாட்டிற்கும் சேத்துமடை ஆரம்ப சுகா தார நிலையத்திலுள்ள வாகன ஓட்டு னரும், மருத்துவரும் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வியாழனன்று ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் உள்ள ஆனைமலை வட்டார மருத் துவ அலுவலர் சங்கரைச் சந்தித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் ஆனைமலை ஒன்றியச் செய லாளர் ஏ.அம்மாசை, தங்கவேலு, தலைமையில் புகார் மனு அளிக்கப் பட்டது. இதுகுறித்து தீர்வு காணப்படு மென மருத்துவர் சங்கர் கூறியுள்ளார்

 தற்போது உள்ள கொரோனோ நோய் தொற்று காலத்தை கருத்தில் கொண் டும், பழங்குடியின மக்களின் நல னைக் கருத்தில் கொண்டும் மருத்துவ மனை நிர்வாகம் விரைந்து நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். தவ றும் பட்சத்தில் சேத்துமடை ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாபெரும் திரள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரி வித்துள்ளார்.

;