districts

img

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் விடை கொடுக்க வேண்டும்

கரூர், மே 9-அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து இரண்டாவதுநாளாக அரவக்குறிச்சி ஒன்றியம் மலைக்கோவிலூர், வேலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மக்களவைக்கு நடைபெற்றதேர்தலில் மத்தியில் மாற்றத்தைஉருவாக்க வேண்டும். அது போல தமிழகத்தில் எடப்பாடிக்கும் மக்கள் விடை கொடுக்கவேண்டும். இந்த சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். வரும் 23-ம் தேதிக்கு பிறகு அவர்களது ஆட்சி நீடிக்காது என்று உறுதிபடக் கூறினார்.அவர் மேலும் பேசியதாவது: இன்றைக்கு இந்த தேர்தல் வருவதற்கு காரணம் எடப்பாடி தான். செந்தில்பாலாஜியுடன் சேர்த்து 18 எம்எல்ஏக்களின் பதவியை பறித்தார்கள். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முதன் முதலாக கூறியது நானோ, செந்தில்பாலாஜியோ இல்லை. துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ்தான் முதன்முதலாக கூறினார்.ஜெயலலிதா இறந்தவுடன் அவரது மரணத்தை முறையாக அரசுதரப்பில் தெரிவிக்காத நிலையில்முதல்வராக பதவியேற்றதால் தான் அவரது பதவி பறிக்கப்பட்டது. முதல்வர் பதவி எடப்பாடி பழனி சாமிக்கு வழங்கப்பட்டதால் கோபி த்துக் கொண்டு ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று துணை முதல்வர் 40 நிமிடம் தவம்தியானம் இருந்தார். அப்போதுஅம்மாவின் ஆவியோடு பேசினேன்; அவரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டேன்; அக்கிரமம் நடந்திருக்கு; உங்கள் சாவுக்கு சிபிஐ விசாரணை கேட்கப் போகிறேன் எனக் கூறியது அவர் தான்.பின்னர், அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து சமாதானப்படுத்தினர். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக பொறுப்பேற்று உட்காரும் நேரத்தில் முதல் வேலையாக ஜெயலலிதாவின் இறப்பின் பின்னணி என்ன, சாவுக்கு காரணமானவர்கள் யார், இதன் பின்னணியில் யார், யார் உள்ளனர் என்பதை கண்டுபிடித்து நாட்டிற்கு அடையாளம் காட்டுவோம்.ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எங்கேயாவது ஒரு இரங்கல் கூட்டம் நடத்தினார்களா? இதுதான் அவர்கள் காட்டும் விசுவாசம். அரவக்குறிச்சி பகுதிக்கு தனிக்கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப் படும். மலைக்கோவிலூர் பஞ்சாலை அருகே புதிய தொழிற்சாலை கொண்டு வரப்படும்.முருங்கை விவசாயி களுக்கு குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும். முருங்கைக்காய் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்தி உங்கள் கையிலேயே சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெஞ்சமாங்கூடலூர்- தேரப்பாடி இடையே குடகனாற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் கட்டப் படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.பிரச்சாரத்தின் போது மக்களவை வேட்பாளர் செ.ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;