districts

img

சிபிஎம் மூத்த தலைவர், தீக்கதிர் நிர்வாக ஆலோசகர்

சிபிஎம் மாநில செயற்குழு அஞ்சலி

சென்னை/மதுரை, மே 8-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரும், தீக்கதிர் நாளிதழின் நிர்வாக ஆலோசகருமான தோழர் வெ.சுந்தரம் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 71.தோழர் வெ.சுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கட்சியின் மாநிலசெயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தோழர் வி.எஸ்.என்றும், தோழர் எழில் என்றும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர் வெ.சுந்தரம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 1949 மே 4 அன்று பிறந்தவர். பள்ளிப்பருவத்திலேயே ஒன்றுபட்ட இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு இயக்கங் களால் ஈர்க்கப்பட்டவர். மானாமதுரையில் இவரது வீட்டிற்கு அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் ஏஐடியுசி சங்கஅலுவலகம் இருந்தது. அங்கு மே தின கொண்டா ட்டம், விளையாட்டுப் போட்டிகள், முற்போக்கு வாலிபர் சங்கம் ஆகிய வற்றில் ஈடுபடத் துவங்கி, மாணவப் பருவத்திலேயே முற்போக்கு சிந்தனை கொண்ட இடதுசாரியாக மாறினார்.

இந்த பின்னணியோடு, 1970களில் அஞ்சல் துறையில் பணிக்கு சேர்ந்த வெ.சுந்தரம், 1972ல் கனரா வங்கியில் பணிக்கு சேர்ந்தார். அங்கு தொழிற்சங்க நட வடிக்கைகளில் ஈடுபடத் துவங்கி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி)உருவாக்குவதிலும், வங்கி ஊழியர்களை தொழிற்சங்கத்தில் அணிதிரட்டு வதிலும் முனைப்புடன் செயலாற்றினார். பெபி அமைப்பின் அகில இந்தி யத் தலைவர்களில் ஒருவ ராகவும், தமிழ்நாடு மாநில துணைத்தலைவராகவும், கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய நிர்வாகியாகவும், பல்வேறு வங்கி தொழிற்சங்கங்களின் வழிகாட்டியாகவும் நீண்டகாலம் செயல்பட்டார்.

இதேகாலகட்டத்தில், முற்போக்கு இலக்கிய வட்டாரத்தின் அறி முகம் கிடைத்து, எழுத்தாளர்களு டன் நெருக்கமான தொடர்பு களை உருவாக்கிக்கொண்டு எழுத்தார்வத்தோடு செயல் படத் துவங்கினார். இந்த பின்னணியில், 1973ல் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அக்காலகட்டத்திலேயே, மதுரை - இராமநாதபுரம் மாவட்டத்தில் உருவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்கத்துடன் நெருக்கமாக செயல்பட்டு, தமுஎச மானாமதுரை கிளையை உரு வாக்கி அதன் முதல் தலைவராக தேர்வு செய்ய ப்பட்டார்.

பின்னர் தமுஎகச மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.1975 அவசர நிலை காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய அரசு ஊழியர்களை கட்சி தலைவர்கள் புனைபெயர் வைத்து அழைத்தார்கள். அப்போது, தோழர் வெ.சுந்தரத்திற்கு, கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ஏ.பெருமாள் வைத்த புனைபெயர் தான் எழில் என்பதாகும். எழில் என்ற பெயரிலேயே அவர் தமிழகம் முழுவதும் தோழர்களுக்கு அறிமுகமானார். மார்க்சியத் தத்துவம், கட்சித் திட்டம் உள்ளிட்ட அரசியல் தத்துவார்த்த வகுப்புகளை மிக எளிமையாக பயிற்றுவிக்கும் திறமை படைத்தவராக, முதலில் ‘முகவை எழில்’ என்ற பெயரில் ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி வகுப்புகளை எடுக்கத் தொடங்கி, பின்னாட்களில் கட்சியின் மாநில கல்விக்குழுவில் இடம் பெற்று தமிழகம் முழுவதும் கட்சி மற்றும் வெகுஜன அரங்க ஊழியர்களுக்கு மார்க்சிய அறிவை ஊட்டியவர் தோழர் சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்கம், கட்சிப் பணிகளுடன் நில்லாமல் தமுஎகச, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம் என பல்வேறு தளங்களில் தன்னை இணைத்துக் கொண்டு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செலுத்தியவர் தோழர் வெ.சுந்தரம். தொழிற்சங்க தலைவர் என்ற முறையில் கட்சியின் ஒன்றுபட்ட மதுரை மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்ட அவர், 2001ல் வங்கிப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று கட்சியின் முழுநேர ஊழியராக செயல்படத் துவங்கினார். மதுரை மாவட்டக்குழு பிரிக்கப்பட்ட போது மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மாநில தணிக்கைக்குழு உறுப்பினராகவும் கட்சி அளித்த அனைத்து பொறுப்புக்களையும் திறம்பட நிறைவேற்றியவர். எளிமையின் சின்னமாக, கட்சி ஸ்தாபனத்தோடு தன்னை இரண்டற கரைத்துக்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க தலைவராக செயல்பட்ட தோழர் சுந்தரம், 2009ம் ஆண்டு டிசம்பரில் தீக்கதிர் மதுரை பதிப்பு பொதுமேலாளராக நியமிக்கப்பட்டார். அந்த பொறுப்பில் திறம்பட செயலாற்றி, தீக்கதிர் நிறுவனத்தை மேம்படுத்து வதில் முக்கியப் பங்கு வகித்தார். அதேகாலத்தில் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். செம்மலரில் தொடர்ந்து அவரதுநூல் மதிப்புரை இடம்பெற்றது. பின்னர் செம்மலர் ஆசிரியர் குழுவிலும் இணைக்கப் பட்டு தற்போது வரை அப்பொறுப்பில் செயலாற்றி வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக தீக்கதிர் பொது மேலாளர் பொறுப்பி லிருந்து விடுபட்டு, தற்போது வரை தீக்கதிர் நிர்வாக ஆலோசகராக இருந்து வழிநடத்தி வந்தவர் வெ.சுந்தரம்.கட்சியின் முழுநேர ஊழியராக ஆன போதிலும், இறுதி வரை கட்சியிலும், தீக்கதிரிலும் எந்தவித ஊதியமும் பெற்றுக்கொள்ளா மல் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கட்சிக்காக அர்ப்பணித்த மகத்தான தலைவர் தோழர் வெ.சுந்தரம்.சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்த அவர், திடீரென உடல்நிலை மோசமடைந்த சூழலில் கடந்த சனிக்கிழமை இரவு மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி புதனன்று (மே 8) காலை 9 மணி அளவில் காலமானார்.

சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்த அவர், திடீரென உடல்நிலை மோசமடைந்த சூழலில் கடந்த சனிக்கிழமை இரவு மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி புதனன்று (மே 8) காலை 9 மணி அளவில் காலமானார்.அவருக்கு கனுகாந்தி என்ற மனைவியும், விஜயராணி என்ற மகளும் உள்ளனர். கனுகாந்தி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மகள் விஜயராணி திருமணமாகி அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.தோழர் வெ.சுந்தரம் அவர்களது மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு தனதுஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது. அவ ரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தீக்கதிர், செம்மலர் ஊழியர்களுக்கும், மதுரை புறநகர், மாநகர் மாவட்ட தோழர் களுக்கும் இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

என்.சங்கரய்யா இரங்கல்

தோழர் வெ.சுந்தரம் மறைவுச் செய்தி அறிந்து, கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், ஏ.கே.பத்ம நாபன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

கட்சியின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்த தோழர் வெ.சுந்தரம் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், க.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், மூத்த தலைவர் என்.நன்மாறன், எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன், தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வே.பரமேசு வரன், செம்மலர் மூத்த துணை ஆசிரியர் தி.வரதராசன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர்மாவட்டச் செயலாளர் இரா.விஜய ராஜன், மாவட்டச் செயலாளர்கள் கே.அர்ஜூணன்(விருதுநகர்), ஆர்.சச்சிதானந்தன் (திண்டுக்கல்), டி.வெங்கடேசன்(தேனி), கே.வீரபாண்டி(சிவகங்கை), வி.காசி நாததுரை(இராமநாதபுரம்), செ.முத்துக் கண்ணன்(திருப்பூர்) மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, கே.காமராஜ், எஸ்.பாலசுப்பிரமணியன், சு.வெங்கடேசன், எஸ்.கே.பொன்னுத்தாய், திமுக மதுரை மாநகர் மாவட்டப் பொறுப் பாளர் கோ.தளபதி, வடக்கு மாவட்டச் செயலாளர் பெ.மூர்த்தி எம்எல்ஏ, வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் பி.என்.அம்மாவாசி, மதிமுக தொழிற்சங்க தலைவர் மகபூப் ஜான், மதச்சார்பற்ற ஜனதாதள மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், சிபிஐ நிர்வாகி கே.கந்தசாமி, மருத்துவர் சுகதேவ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலா ளர்கள், கட்சி உறுப்பினர்கள், சிஐடியு, வாலிபர், மாணவர், மாதர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமுஎகச, தீண்டா மை ஒழிப்பு முன்னணி, அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டு ஊழியர்கள் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள், தலைவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மறைந்த தோழர் சுந்தரம் உடலுக்கு மாலை அணி வித்து கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்கினர். 

தீக்கதிர் - செம்மலர் ஊழியர்கள் அஞ்சலி

தோழர் வெ.சுந்தரம் உடலுக்கு தீக்கதிர், செம்மலர் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், செய்தி ஆசிரியர் ப.முரு கன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், திருச்சி பதிப்பு பொது மேலாளர் எஸ்.பன்னீர் செல்வம், விளம்பர மேலாளர் ஆர்.உமாபதி, அச்சக மேலாளர் க.பாண்டியராஜன், செம்மலர் துணை ஆசிரியர் சோழ.நாக ராஜன், தீக்கதிர், செம்மலர் முகவர்கள், விளம்பரதாரர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தோழர் வெ.சுந்தரத்திற்கு பிரியாவிடை அளித்தனர்.

;