districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இலவச பயணச்சீட்டில் பயணம் செய்யும் பெண்களை அவதூறாக பேசும் நடத்துநர்கள்

திருப்பூர், மார்ச் 31- அரசு பேருந்துகளில் இலவச பயணச்சீட்டில் பயணம் செய் யும் பெண்களை அவதூறாகப் பேசும் பேருந்து ஓட்டுநர்கள்  மற்றும்  நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் அரசுப் போக்குவரத்து  பொது மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட போக்குவரத்து  பொது மேலாளரிடம்  மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் ஆர்.மைதிலி அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் தேர்தல் வாக்கு றுதியை நிறைவேற்றும் வகையில் அரசு நகரப் பேருந்துகளில்  பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை நிறைவேற்றியது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல வழித்தடங்களில்  இயங்கி வந்த அரசு நகரப் பேருந்துகள் தற்பொழுது முறை யாக இயக்கப்படுவதில்லை. அதனால் பொதுமக்கள் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள் ளது. மேலும் வருகிற பேருந்துகளும் குறிப்பிட்ட நேர இடை வெளிகளில் வராமல் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால் மக்கள் பேருந்து வசதிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. அரசால் இயக்கப்படும் இலவச பேருந்து பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் பெண்களை சில ஓட்டுநர்க ளும், நடத்துநர்களும் இழிவாக கருதுவதும், தகாத வார்த்தை களில் ஒருமையில் பேசுவதும், கண்ணிய குறைவாகவும் சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும்  நடந்து கொள்கிறார்கள். இதனால் பல பெண்கள் இலவச பயணம்  என்கிற காரணத்தினால் தான் இவர்கள் இப்படி நடந்து கொள் கிறார்கள். இதற்கு பணம் கொடுத்தே பயணம் செய்வதே நல் லது என்று பேசுகிற நிலைமை ஏற்பட்டுள்ளது.  கடந்த 28 ஆம் தேதி  இரவு 8.30 மணிக்கு திருப்பூர் புதிய  பேருந்து நிலையத்தில் 11 ஆம் எண் பேருந்தில் (டிஎன் 39  0050) தோட்டத்து பாளையம் செல்ல நானும் பல பெண்களும்  பேருந்தில் ஏற முற்பட்டபோது ஓட்டுநர் இப்பேருந்தில் ஏற வேண்டாம் அடுத்த பேருந்து வரும் அதில் ஏறுங்கள் என்று கூறி னார். இப்பேருந்தில் இடம் இருந்த காரணத்தினால் நானும்  பல பெண்களும் ஏறினோம். அப்போது ஓட்டுநர் பெண்களை  ஒருமையில் பேசியும், பொதுவாக பெண்கள் குறித்து இழி வாக பேசியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்களும்  பேசினோம். அப்பேருந்தில் பயணம் செய்த பல பெண்களும்  தொடர்ந்து பல பேருந்துகளில் சில நடத்துநர்களும் ஓட்டுநர்க ளும் பெண்களை அவமானப்படுத்துவதாக ஆதங்கப்பட்ட னர். பெண்களின் நலன் கருதி தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ள சிறந்த திட்டத்தை போக்குவரத்துத் துறையில் பணி யாற்றும் சில ஊழியர்களால் தமிழக அரசுக்கு அவ பெயர் ஏற் படுகிறது. இதுபோன்று பெண்களை இழிவுபடுத்தும் செயல்க ளில் ஈடுபடும் நபர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும். மீண்டும் இதுபோல் நடைபெறாமல் தடுக்க வேண் டும் என கூறப்பட்டுள்ளது.

மின் இணைப்பில் ஆதார் எண் இணைப்பதில் குளறுபடி

உடுமலை, மார்ச் 31- மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதில் உள்ள  குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும் என விவசாயி  கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், விவசாய  பயன்பாட்டிற்கு மின்வாரியத்தின் மூலம் கடந்த 1979 ஆண்டு  மின் இணைப்பு பெற்றேன். தற்பொழுது ஆதார் எண்ணை  மின் இணைப்புடன் இணைக்க சென்ற போது, மின்வாரிய அலு வலகத்தில் மின் இணைப்பு எண் ஆன்லைனில் இணைக்கப்ப டாமல் உள்ளது. அதனால் ஆதார் எண்ணை இணைக்க முடிய வில்லை என்று தெரிவித்தனர்.  இது போன்று பல மின் இணைப்புகள் கணினியில் ஏற்றம்  செய்யாமல் இருப்பாதல் குறிப்பிட்ட காலத்தில் ஆதார் எண் களை இணைக்க முடியாமல் இருக்கிறது. எனவே விடுபட்ட  மின் இணைப்புகளை முறையாக இணைக்க சிறப்பு முகாம்  நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நகர்மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர  சிபிஎம் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

அவிநாசி,மார்ச்.31 திருமுருகன்பூண்டி நகராட்சி  பகுதிகளில் அடிப்படை வசதிகளை  செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் நக ர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினர். திருமுருகன்பூண்டி நகர்மன்ற  கூட்டம், நகர்மன்ற தலைவர் குமார்  தலைமையிலும், அப்துல் ஹாரிஸ்  முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 ஆவது  வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுப்பிர மணி பேசுகையில், சில மாதங்க ளுக்கு முன்பு புதிய குடிநீர் இணைப்பு  வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய இணைப்பு கேட்டு 2088 விண் ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித புதிய  இணைப்பும் வழங்கப்படவில்லை. இதற்கு தீர்வு எப்பொழுது என கேட் டார். இதற்கு நகராட்சி பொறியாளர், புதிய குடிநீர் இணைப்பு வழங்குவ தற்கு ஆறு மாத கால தேவைப்படுகி றது. மேல்நிலைத் தொட்டிகள்  அமைக்க கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். தூய்மை பணிகள்  தனியார்மயம் ஆன சூழ்நிலையில்  ஆட்குறைப்பு நடவடிக்கையில்  ஈடுபடக்கூடாது. ஆட்சியர் உத்தர விட்ட கூலி  வழங்க வேண்டும். அதே போல சுகாதாரப் பணிகளை மேற் கொள்ள கொசு மருந்து, ப்ளீச்சிங் பவு டர் போன்றவை பயன்படுத்த வேண் டும் என்று போன கூட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டது. இன்று வரை  முன்வைத்த கோரிக்கை நிறைவேற் றப்படவில்லை. உடனடியாக சுகாதா ரப் பணிகளை மேற்கொள்ள வேண் டும். புதிய தெருவிளக்குகள் அமைப் பது எப்போது என்று கேட்டதற்கு, நக ராட்சி ஆணையர், மண்டல இயக்கு நர்களைச் சந்தித்து அனுமதி பெற்று தெரு விளக்குகள் அமைக்க ஏற்பாடு  செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 14 ஆவது  வார்டு நகர்மன்ற உறுப்பினர் தேவரா ஜன் பேசுகையில், மகாலட்சுமி டவுன் ஷிப், சிவா நகர் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள ஆழ்துளை கிணறுகளில் மின்  மோட்டார் இருந்தும் மின் இணைப்பு  வழங்கப்படாமல் இருந்து வருகிறது.  இதுகுறித்து மூன்று கூட்டமாக வலியு றுத்தி வருகிறேன், தற்பொழுது வரை  தீர்க்கப்படாமல் இருக்கிறது. உடனடி யாக நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  அனைத்து பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடங்களைப் புதுப்பிக்க வேண் டும். மோட்டார் அறைகளை பழுது  நீக்கம் செய்ய வேண்டும். புதிய தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவ டிக்கை வேண்டும் என்று கூறினார்.  இதனைத்தொடர்ந்து 22 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்  பார்வதி சிவகுமார் பேசுகையில்,  எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில்  தார்ச்சாலை அமைக்க 10 லட்சம்  ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்ததாரர் நியமிக்கப் படாமல் இருக்கிறது  உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். கோவில்  அருகே உளள கழிப்பறையை புதுப் பித்து தர வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி வருகிறேன். இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. உடனடியாக நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என தெரி வித்தார்.

ரூ. 38.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, மார்ச் 31- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற  பருத்தி ஏலத்திற்கு, மொத் தம் 1938 பருத்தி மூட்டைகள்  வந்திருந்தன. இதில், ஆர்.சி. எச். பி.டி. ரகப்பருத்தி குவிண் டால் ஒன்றுக்கு ரூ. 6,000  முதல் ரூ.7,598 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 2,000 முதல் ரூ.3,500  வரையிலும் ஏலம் போனது.  மொத்தம் ரூ.38 லட்சத்து 48  ஆயிரத்துக்கு பருத்தி ஏல  வர்த்தகம் நடைபெற்றது.

செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்

நாமக்கல், மார்ச் 31- ராசிபுரம் அருகே பன்றிகளை அழிக்கும் நிகழ்வை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கல்லாங் குளம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் சொந்தமாக பண்ணை அமைத்து பன்றிகளை வளர்த்து வருகிறார். இந் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ணையில் பன்றி ஒன்று இறந்து கிடந்துள்ளது. பன்றி உயிரிழந்ததை தொடர்ந்து, உரிமையாளர் மாவட்ட கால்நடை துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு வந்த கால்நடை துறை அதிகாரிகள் இறந்து கிடந்த பன்றி யின் உடலை கைப்பற்றி, சென்னையில் உள்ள ஆய்வ கத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பன்றியை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பண்ணையில் இறந்த கிடந்த பன்றிக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் உறுதி செய்யப் பட்டதை அடுத்து பண்ணையை சுற்றி 1 கிலோ மீட்டர் தூரத் திற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அறிவித்தார். இந்நிலையில், இறந்த கிடந்த பண்ணையில் உள்ள  20க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல மாவட்ட கால்நடை  துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை அடுத்து மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள் பண் ணைக்குச் சென்று 20க்கும் மேற்பட்ட பன்றிகளை கொன்று புதைப்பதற்காக பண்ணையில் குழி தோண்டி அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பன்றிகளை கொன்று  அழிக்கும் நிகழ்வுகளை செய்தி சேகரிக்க பண்ணைக்கு சென்ற செய்தியாளர்களை கால்நடை துறை அதிகாரிகள்  தடுத்து நிறுத்தி, செய்தி சேகரிக்கக்கூடாது எனக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து செய்தியாளர்கள் கால் நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தடை செய்யப் பட்ட பகுதியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என மாவட்ட  ஆட்சியர் உத்தரவு விட்டதாகவும், இதனால் செய்தியாளர்கள் வெளியே செல்லுமாறு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை மும்பை தொழில் அதிபர் மீது வழக்கு

கோவை, மார்ச் 31- கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண்ணுக்கு செல்போனில் பேசி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மும்பை தொழில் அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் (44). செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறு வனம் நடத்தி வருகிறார். இவருக்கு கோவை போத்தனூர் சத்ய நாராயண நகரை சேர்ந்த ஹேசல் ஜேம்ஸ்(27) என்ற  இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் கடந்த 4 ஆண்டு களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.  இந்நிலையில், போத்தனூர் காவல் நிலையத்தில், ஹேசல் ஜேம்ஸ் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் பழக்கத்தின் பேரில் தொழில் தொடங்க வேண்டும்  என்று ராஜேசிடம் தெரிவித்தேன். அவர் ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்களை அனுப்பினார்.  அதனை விற்பனை செய்து அதற்குண்டான பணத்தை அவருக்கு அனுப்பி விட்டேன். ஆனால் ராஜேஷ் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசி  துன்புறுத்தினார். ஆனால் மீண்டும், மீண்டும் இரவு நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும். என தெரிவித்திருந்தார். அதன்பேரில், போத் தனூர் போலீசார் மும்பை தொழிலதிபர் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி 

கோவை, மார்ச் 31- கோவை சின்னியம்பாளையம், இருகூர் சாலையில் டாஸ் மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில் களை அருகே உள்ள இருப்பு அறையில் வைத்து செல்வது  வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை ஊழியர் இருப்பு அறையை திறந்து மது பாட்டில்களை எடுப்பதற்காக சென்றார்.  அப்போது அறை கதவின் பூட்டு பாதி உடைந்தும், பாதி  உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது. நள்ளிரவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை உடைத்து  கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந் தார். உடனே இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக் கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து  டாஸ்மாக கடை இருப்பு அறையில் மதுபாட்டில்களை கொள் ளையடிக்க முயன்ற நபர்களை தேடி வருகின்றனர்.

அழகு நிலைய பெண்ணை மிரட்டிய கும்பல்

கோவை, மார்ச் 31-  கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண்.  இவர் அங்கு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, அந்த பெண் பியூட்டி பார்லரில் இருந்தார். அப்போது அவ ருக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான 3 பெண்கள் உட்பட 4  பேர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணிடம் பணம் கேட்டனர்.  அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார், பணம்  தரவில்லையென்றால், உன்னை நிர்வாண வீடியோ எடுத்து  பொது தளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டல் விடுத்து  விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பெண்ணிடம் நிர்வாண வீடியோ  எடுத்து வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தது ரீச்சல், செலீனா,  ராஜகுமாரி மற்றும் ஒரு ஆண் என்பது தெரியவந்தது. போலீ சார் 4 பேர் மீதும் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு  சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை: குற்றவாளிக்கு 17 ஆண்டு சிறை

உதகை, மார்ச் 1- சிறுமியை கடத்தி விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகு தியை சேர்ந்தவர் ராஜ்குமார் (26). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவன பனி யன் கம்பெனியில் ஊழியராக பணி யாற்றி வந்தார். விடுமுறைக்கு அவ்வப் போது சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். இவ்வாறு சென்றபோது நாடுகாணி பகுதியைச் சேர்ந்த ஆதிதிரா விடர் வகுப்பை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியுடன் ராஜ்குமாருக்கு பழக்கம்  ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காத லுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜ்குமார் அந்த சிறுமியுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். அருகில் இருந்த தனியார் எஸ்டேட்டுக்கு சென்று இருவ ரும் விஷம் குடித்து  மயங்கி கிடந்தனர். இதில் அந்த சிறுமி இறந்து விட்டார். மயங்கி கிடந்த ராஜ்குமாரை அருகிலி ருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின் ராஜ்குமார் குணமடைந்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் தேவாலா காவல் நிலைய ஆய்வாளர் ஞானரவி தங்கதுரை, உதவி ஆய்வாளர் பிரேம் குமார் தலைமையிலான போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 வருடங்களாக உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு வெள்ளியன்று கூறப்பட்டது. இதில் இந்திய தண்டனைச் சட்டம் 365-ன்படி (கடத்தல்) மற்றும் வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 5  ஆண்டுகள் சிறை தண்டனை, ஐபிசி 305 (சிறுமியை தற்கொலைக்கு தூண்டு தல்) சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். மேலும் இந்த  தண்டனையை ஏக காலத்தில் அனுப விக்குமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தருமபுரியில் இருந்து வந்த குட்டியானை உயிரிழப்பு

உதகை, மார்ச் 31- தருமபுரியிலிருந்து முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்த குட்டியானை வயிற்று போக்கு  காரணமாக வியாழனன்று நள்ளிரவில்  உயிரிழந்தது, அப்பகுதி பொதுமக் களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்து கிணற்றில் தவறி விழுந்த குட்டி  யானையை மீட்டு,  பொம்மன் என்ற யானை பாகன் மூலம் கடந்த மார்ச் 16  ஆம் தேதியன்று முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம் கொண்டு வரப்பட்டு பராமரிக்க பட்டு வந்தது. உதவி வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் ஆலோச னையின்படி, குட்டி யானைக்கு திரவ  உணவுகள் வழங்கப்பட்டு, தற்போது  ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன் மற் றும் பெள்ளி தம்பதி மூலம் தினசரி கண்காணிக்கபட்டு வந்தது. பொதுவாக யானை குட்டிகளுக்கு மனிதர்கள் உட் கொள்ளும் லேக்டோஜன் பால்பவுடரை தான் உணவாக அளிக்கப்பட்டு வந்தது. இந்த லேக்டோஜினை செரிப்பதற்கான என்சைம் யானைகளில் சுரப்பது மிக வும் குறைவு. முக்கியமாக தாயினால் கைவிடப் பட்ட இந்த மாதிரி குட்டிகளுக்கு இந்த  என்சைம்கள் சுரப்பது மிக மிக குறைவு. எனவே, லேக்டோஜன் செரிமானம் ஆகா மல் சிறிது சிறிதாக உடலில் சேகரம் ஆகும். இந்த மாதிரி லேக்டோஜன் சேக ரமாவது திடீரென்று ஏற்படும் வயிற்று போக்கு மூலம் தான் நமக்கு தெரிய வரும். அப்பொழுது வயிற்றுபோக்கு தொடர்ச் சியாக இருக்கும். அதற்கு முன்னால் இதனுடைய அறிகுறி வெளியே தெரி யாது. ஆனால், குட்டி சுறுசுறுப்பாக இருக்கும். நன்றாக விளையாடும். இந்த  குட்டியும் இதேபோல் தான் இருந்தது. இந்த லாக்டோஜன் செரிமானம் ஆகா மல் சேகரமாகி ரத்தத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதனால் திடீ ரென்று வயிற்றுபோக்கு ஏற்படும். அவ் வாறு தான் இந்த குட்டிக்கும் திடீரென்று வியாழனன்று மதியம் டையேரியா ஏற் பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் கலைவாணன், ஸ்ரீதர் மற்றும் ராஜேஷ் ஆகியோர் தெரிவித்தனர். மருத்துவர்கள் அறிவுரைப்படி மருந் துகள் குளுகோஸ் மூலம் கொடுக் கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி குட்டியானை வியாழனன்று இரவு இறந் துவிட்டது. இதனால் பொம்மன் –  பெள்ளி தம்பதி முதல் அப்பகுதி பொது மக்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள் ளனர். மேலும், ஒவ்வாமை காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டு இறந்திருக்கக் கூடும், ஆனால் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர்தான் முழுமையான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் வீட்டில் கொள்ளை'

தாராபுரம், மார்ச் 31- தாராபுரம் அருகே தனி யார் வங்கி ஊழியர்கள் வீட் டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்  துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தாராபுரம் அருகே உள்ள பூளவாடி பிரிவு, அசோக் நகர், 6 ஆவது வீதியில் செல் லமுத்து (57) – கவிதா (49)  தம்பதியினர் வசித்து வரு கின்றனர். இருவரும் தனி யார் வங்கியில் வேலை செய்து  வருகின்றனர். இந்நிலை யில், இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க ஆபரணங்கள், ரூ.1 லட் சம் மதிப்பிலான வெள்ளி  பொருட்கள் மற்றும் ரூ.2 லட் சம் ரொக்கம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர் கள் கொள்ளையடித்து சென் றுள்ளனர். இதுகுறித்து தாரா புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரியில் படப்பிடிப்பிற்கு தடை

உதகை, மார்ச் 31- கோடை சீசன் துவங்கியதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டகலைத்துறைக்கு சொந்தமான பூங்காக்களில் 2 மாத  காலத்திற்கு சினிமா படப்பிடிப்பிற்கு தடை என தோட்ட கலைத்துறை அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங் கள் கோடை சீசன் காலங்களாகும். இதனால் இங்கு நிலவும் காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடு களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உத கைக்கு வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பய ணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மலர்கண் காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழ கண்காட்சி  மற்றும் கோடை விழாக்கள் சுற்றுலாத்துறை தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரு கிறது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அவர் களை மகிழ்விக்கும் வகையில் மலர்கள் காட்சி பழ கண்காட்சி உட்பட கோடை விழாக்கள் நடத்த பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏப்.1 ஆம் தேதி (இன்று) முதல் 2 மாத காலத்திற்கு உதகை  அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா,  மரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப் புக்கு தோட்டகலைத்துறை தடை விதித்துள்ளது.

கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை

கோவை, மார்ச் 31- வால்பாறை அருகில்  கன்றுக்குட்டியை சிறுத்தையால் தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள காஞ்ச மலை மற்றும் வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் சுப்பையா  என்பவருடைய 3 வயது கன்று குட்டி, அப்பகுதியில் வியாழ னன்று மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. அப்போது வனப்பகுதியி லிருந்து வந்த சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியை தாக்கி கொன்றதாக தெரிகிறது. கன்றுக்குட்டி வீட்டிற்கு வராததால் அதை தேடி வனபகுதிக்கு சென்ற அதன் உரிமையாளர் கன் றின் உடலின் பாகங்கள் அங்கு கிடந்ததை அறிந்து அதிர்ச்சி யடைந்தார். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை  நடத்தியதில் கன்று குட்டியை சிறுத்தை வேட்டையாடி சென் றது தெரிய வந்தது.
 

 



 

 

;