districts

img

தனியார் தொழிற்பேட்டைகளிலும் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக. 19- அனைத்து தொழிற் பேட்டைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 4ஆவது மாநாடு போச்சம்பள்ளியில் தோழர் டி.லட்சுமணன் நினை வரங்கில் நடைபெற்றது.    தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். செல்வராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலப் பொருளாளர் சக்கரவர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் பெரியசாமி வேலை அறிக்கையையும், வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தார்.  முன்னாள் மாவட்டச் செயலாளர் முரு கேசன், மாவட்ட துணை செய லாளர் எஸ்.ஆர்.ஜெய ராமன், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், ஓசூர் மாநகரச் செய லாளர் சி.பி.ஜெயராமன் போச்சம்பள்ளி வட்டக்குழு செயலாளர் சாமு, விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் பிரகாஷ், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இள வரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அனைத்து ஊராட்சிகளி லும் மாற்றுத்திறனாளிக ளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும், போச்சம் பள்ளி, ஊத்தங்கரை ஓசூர் கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் அந்தந்த பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி கல்லூரிகளில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலை வராக திருப்பதி, செய லாளராக பெரியசாமி, பொரு ளாளராக எஸ்.ஆர்.ஜெய ராமன் ஆகியோர் புதிய  நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

;