districts

img

சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: சூளகிரி விவசாயிகள் போராட்டம் வெற்றி

கிருஷ்ணகிரி, டிச. 31- சூளகிரி தேன்கனிக்கோட்டை வட்டங்களில் ஊட்டி போன்ற தட்ப வெப்ப நிலை நிலவி வருவதால் கேரட், பீட்ரூட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், குடைமிளகாய், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலை உயர்ந்த கொய்மலர்கள் விளைவிப்பதில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் 2ஆவது இடத்திலும், ராகி விளைச்சலில் முதலிடம் வகிக்கிறது. மேலும் எப்போதும் வற்றாத தென்பெண்ணை ஆற்று பாசனம் இப்பகுதியில் உள்ளதால் விவசாயம் செழித்தோங்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தை பின்தங்கிய பகுதியாக கருதி, ஓசூரை ஒட்டி சிப்காட் 1, 2, 3 அமைக்கப்பட்டது. தொடர்ந்து குரு பரப்பள்ளி, போலுப்பள்ளி, போச்சம்பள்ளி பகுதிகளிலும் சிப்காட் அமைக்கப்பட்டது. தற்போது சூளகிரி வட்டத்தில் நாகமங்கலம், அயரணப்பள்ளி, உத்தனப்பள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதி களில் 5ஆவது சிப்காட் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் மூன்று போகம் விளைந்து கொண்டிருந்த பல ஆயி ரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவ சாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி பெருமுதலாளி களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்பட்டன. மேலும் உள்வட்ட, வெளிவட்ட நான்கு வழி, ஆறு வழி சாலைகளுக்கு என்றும், ஐடிபிஎல் எரிவாயு குழாய், கெயில் குழாய் பதிப்பு என வேகமாக விவசாய நிலங்கள் சூளகிரி வட்டத்தில் சூறை யாடப்பட்டு வருகின்றன. இதனால் விவசாய நிலங்கள் சுருங்கி போனது. மேலும் கடந்த 15 ஆண்டுகளில் கல் குவாரிகள், கிரஷர்கள், வட மாநிலத்தவர்களின் கிரானைட் தொழிற்சாலைகள் என்று மலைகள் அனைத்தும் வேகமாக தகர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் கடந்த 2 வருடமாக கார்ப்ப ரேட்டுகளுக்காக சிப்காட் தொழில் பூங்கா, தொழிற்சாலைகள் அமைக்க மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 5000 ஏக்கருக்கும் மேல் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.    இந்நிலையில் தற்போது டாட்டா நிறுவனத்திற்கு என்று நாகமங்கலம் ஒட்டிய பகுதிகளில் 3,400 ஏக்கருக்கு மேற்பட்ட வளமான சிறு குறு விவசாயிகளின் நிலங்களை விவசாயிகள் அனுமதியின்றி கையகப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், சிப்காட் நிர்வாகமும் முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலங்களில் 1,500 ஆழ்துளை கிணறுகள், 10,000 தென்னை மரங்கள், 500க்கும் மேற்பட்ட கிணறு கள், 25 கிராமங்கள், 5,000 குடியிருப்புகள், 10 பள்ளிக்கூடங்கள், 6 ஏரிகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலங்களை கையகப்படுத்தினால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என சிறு குறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் போராடி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 26ஆம் தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் உத்தனப்பள்ளியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சூளகிரி வட்டாட்சி யர் அனிதா, சார் ஆட்சியர் சரண்யா ஆகியோர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டில்லிபாபு மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது நிலத்தை கையகப் படுத்த மாட்டோம் என்றும் உங்க ளது கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம் என்றும் எழுத்துபூர்வமாக கடிதம் அளித்தார். மேலும் தேன்கனிக்கோட்டையில் இதுகுறித்து 4ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் மீண்டும் அரசுக்கு உங்கள் கோரிக்கையை மனுவாக அளிக்கும் படியும், காத்திருப்பு போராட்டத்தை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டார்.              தற்காலிகமாக போராட்டம் வெற்றி யடைந்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர். இதில் மாவட்டத் தலைவர் முரு கேசன், மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், பொருளாளர் எம்எம்.ராஜு, நிர்வாகிகள் நற்குணா, சரஸ்வதி சீனிவாசன், முனியப்பா, அனுமப்பா, ராஜா, மாரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.