சிதம்பரம், ஏப். 4- சிதம்பரம் அருகே உள்ள மேல் அனுவம்பட்டு,கீழ் அனு வம்பட்டு கிராமங்களில் அண்ணா மலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி கள் விவசாய சம்பந்தமான பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணா மலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி முதல்வர் அங்கயற் கண்ணி கலந்து கொண்டு சிறு தானிய கண்காட்சியை துவக்கி வைத்து சிறுதானியங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வேளாண் விரிவாக்கத்துறை தலை வர் தமிழ்செல்வி விவசாயிகளுக்கு இலவச பழ மரக்கன்றுகளை வழங்கினார். வேளாண் விரிவாக்க துறை இணைப் பேராசிரியர்கள் சண்முகராஜா, சக்திவேல், மீனாம்பிகை, உழவியல் துறை இணை பேராசிரியர் பாபு, ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இதில் மேல் அனுவம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தவமணிமருதப்பன், துணைத் தலை வர் கலாஅய்யாசாமி, கீழ் அனு வம்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.