districts

img

ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி

திருப்பூர், ஜன. 27 - தில்லியில் போராடிய விவசாயி களிடம் மோடி அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி திருப்பூரில் டிராக்டர் பேரணி  நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் விவசாயி கள் விரோத கொள்கைகளை கண் டித்தும், விவசாய விளைபொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் இயற்று, அரசு  கொள்முதலை உத்தரவாதப்ப டுத்து, வேளாண் விஞ்ஞானி சாமிநா தன் குழு பரிந்துரையை அமுல்ப டுத்து, மின்சார சட்ட திருத்த மசோ தாவை கைவிடு, சிறு குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை ரத்து செய், தில்லி போராட்டத்தில் உயிர்  நீத்த விவசாய தியாகிகளுக்கு நினை வுச்சின்னம் மற்றும் குடும்பங்க ளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்ன ணியின் சார்பில் வியாழனன்று இப் பேரணி நடைபெற்றது.  திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் ராயர்பாளையத்திலிருந்தும், பெரு மாநல்லூர் சாலை பூலுவபட்டியி லிருந்தும் இரு அணியாக புறப்பட்டு,  

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை அடைந்தது, அங்கு கோரிக்கை விளக்க கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சின்னச் சாமி ஆகியோர் தலைமை வகித்த னர். கோரிக்கைகளை விளக்கி தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன், தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி எம்.மோகன் ஆகியோர் உரையாற்றினர். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் பி.ஆர்.நடரா ஜன், சிஐடியு மாவட்ட செயலாளர்  கே.ரங்கராஜ், தமிழ் மாநில விவசாய  தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் வி.பி.பழனிசாமி, அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அ.பஞ்சலிங்கம் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி  உரையாற்றினர். பல்லடத்தில்  வை.பழனிசாமி, வி.சௌந்தரரா ஜன், பூலுவபட்டியில் ஜி.கே.கேச வன், எஸ்.கே.கொளந்தசாமி ஆகி யோர் பேரணியை ஒருங்கிணைத் தார்கள். இந்த பேரணியில் டிராக் டர், இரண்டு மற்றும் நான்கு சக்கர  வாகனங்களில் ஏராளமான விவசாயி கள் கலந்து கொண்டனர்.

;