districts

சொத்து வரியை குறைத்து, குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்க! இராஜபாளையத்தில் 12 மையங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், பிப்.8- இராஜபாளையம் நகரில்  பாதாள சாக்கடை தாமிர பரணி குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சொத்து வரியை குறைத்து, குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்  பில் ஆர்ப்பாட்ம் நடைபெற் றது.  சோழராஜா பட்டியில் நடைபெற்ற போராட்டத் திற்கு செல்வராஜ் மற்றும் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடைபெற்ற போராட்டத் திற்கு சரவணன் மற்றும்  வீரமணி தலைமை தாங்கி னார். சம்பந்தபுரம் போஸ் பார்க் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு முருகா னந்தம் மற்றும் பால மஸ் தான் தலைமை தாங்கினார். வடக்கு மலை யடிப்பட்டி நான்கு முக்கில் நடைபெற்ற போராட்டத்திற்கு செல்வம் மற்றும் சன்னாசி தலைமை  தாங்கினார். தாலுகா அலு வலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு அய்யனார் மற்றும் குருசாமி தலைமை தாங்கினார். எம்ஜிஆர் நக ரில் நடைபெற்ற போராட்டத் திற்கு செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். தெற்கு அழகை நகரில்  நடைபெற்ற போராட்டத் திற்கு சந்திரன் தலைமை தாங்கினார். ஆர் ஆர் நக ரில் நடைபெற்ற போராட்டத்  திற்கு பொன்னுச்சாமி மற் றும் கார்த்திகா தலைமை தாங்கினார். முனியன் பொட்  டலில் நடைபெற்ற போராட் டத்திற்கு மாரிமுத்து மற்றும்  பழனிச்சாமி தலைமை  தாங்கினார். பட்டுக்கோட்டை மன்றம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு ஜானகி தலைமை தாங்கினார். மதுரை கடை தெருவில்  நடைபெற்ற போராட்டத் திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சின்ன சுரக்காய் பட்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஜெகன் மற்றும் மைதிலி தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன், மாநி லக் குழு உறுப்பினர் மகா லட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்  ராமர், நகரச் செயலாளர் மாரி யப்பன், மூத்த தோழர் கணே சன் நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் பிரசாந்த் ஆகியோர் பேசினர்.

;