districts

img

நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர், மே.27 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி அய்யப்பநாயக்கன் பேட்டை பஞ்சா யத்துக்கு உட்பட்டது தர்மசமுத்திரம். இக்கிரா மத்தில் உள்ள செங்கால் ஓடை அருகில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல  ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்க ளின் வீடு அமைந்துள்ள பகுதி நீர்நிலை ஆக்கிர மிப்பு என்று கூறி, வீடுகளை காலி செய்ய  வேண்டும் என வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.  இதனை கண்டித்து கடந்த 3 நாட்களுக்கு  முன்பு அப்பகுதி மக்கள் ஆடு, மாடு, கோழி களை கையில் வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெள்ளியன்று அதிகாரிகள் பொதுமக்களை சந்தித்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஆட்டோ மூலம் தகவல்  தெரிவிக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  சம்பவம் அறிந்த உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், ஆண்டி மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன்  தலைமையிலான போலீசார் பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறிய தையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செங்கால் ஓடைக்கும் எங்களுக்கும் சுமார் 500 மீட்டருக்கு மேல் தூரம் இருப்பதாகவும், நாங்கள் தேசிய நெடுஞ்சாலை அருகேதான் இருக்கிறோம். எனவே அதிகாரிகள் சம்பந்தப் பட்ட இடத்தை பார்வையிட்டு தனிக்குழு அமைத்து மறுபரிசீலனை செய்து குடியிருப்ப வர்களுக்கு குடி மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வீடுகளை இடிக்கும் பட்சத்தில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.

;