திருச்சிராப்பள்ளி, அக்.22 - திருச்சி கலையரங்கத்தில் மாவட்ட தொலைநோக்குத் திட்டம் ஆவண வெளியீடு நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொலைநோக்குத் திட்டம் ஆவணத்தை வெளி யிட்டனர். பின்னர், 1115 பயனாளிகளுக்கு ரூ.17.99 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “விவ சாயத்தில் நீர் பாசனத்தை இரட்டிப்பாக்குவோம் என முதல்வர் கூறியுள்ளார். அண்மையில்கூட பள்ளி கல்வித்துறை சார்பில் 24 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட ரூ.1200 கோடியை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறையின் மூலம் செயல்படுத்த 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனது துறையிலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது மாநில அளவிலான முதல்வரின் தொலைநோக்கு திட்டம். தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியர், மிகவும் பின் தங்கிய பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவை களை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டங்களை இதில் சொல்லி இருக்கிறார். குறிப்பாக பச்சைமலையில் ஒரு ஏரியை கொண்டு வந்தால் அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச் சனை தீரும் என்று கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னெடுத்துச் செல்லும் திட்டங்களுக்கு நாங்கள் உதவியாக இருப்போம்” என்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகை யில், “திருச்சியில் ஒரே நாளில் 10 லட்சம் மக்கள் வந்து செல்லும் அளவுக்கு பஞ்சபூரில் பெரிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒன்பது தொகுதிகளி லும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் இந்த தொலை நோக்கு திட்ட அறிக்கை மக்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார். இந்நிகழ்வில் ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆர்.வைத்தி யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், எஸ்.இனிகோ இருதயராஜ், சீ.கதிரவன், அப்துல் சமது, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.