பெரம்பலூர், பிப்.20- போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் - 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் - 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 மூலம் இதுவரை எத்தனை புதிய வழித்தடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளது என்பது குறித்தும், தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் எவையெல்லாம் மாவட்ட அரசிதழில் வெளிவந்துள்ளது என்பது குறித்தும் ஒவ்வொரு மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டங்கள் வாரியாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர், போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: புதிய மினி பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அதற்காக ஒப்பந்தம் வெளியிடப்பட்டு புதிய மனுக்களும் பெறப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் மினி பேருந்து இயக்கம் தொடர்பாக எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது, அதற்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை குறித்த இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஹிந்தி திணிப்பு : மேலும் கூறுகையில், ஏற்கனவே இங்கு இரு மொழிக் கொள்கை உள்ளது, ஹிந்தியை விரும்பியவர்கள் படிக்கலாம், ஹிந்தி திணிப்பைதான் திமுக அன்றிலிருந்து இன்று வரை எதிர்கிறது. அண்ணாமலை தனக்கு விளம்பர வெளிச்சத்திற்காக எதையும் பேசி வருகிறார். மேலும், அவர் இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இதை செய்து வருகிறார் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அழகரசு, துணை போக்குவரத்து ஆணையர்கள் செல்வகுமார், ஜெயக்குமார், திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு மண்டலங்களுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.