மயிலாடுதுறை, ஆக.28 - சிஐடியு மயிலாடுதுறை மாவட்ட முதல் மாநாடு தானா மஹாலில் ஞாயி றன்று நடைபெற்றது. முன்னதாக சங்க கொடியினை மாவட்டக் குழு உறுப்பி னர் பி.வேம்பு ஏற்றி வைத்தார். தியாகி களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மாவட்ட தலைவர் சீனி.மணி தலைமை யுரையாற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பாரதிமோகன் வாசித்தார். வரவேற்புக் குழு தலைவர் ஆர்.ராமானுஜம் வரவேற்று பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் உரையாற்றி னார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் ஆர்.ரவீந்திரன், வரவு - செலவு அறிக்கையை மாவட்டப் பொரு ளாளர் எஸ்.சிவராஜன் ஆகியோர் வாசித்தனர். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார். பிரதி நிதிகள் விவாதத்திற்கு பிறகு சங்கத்தின் மாவட்டத் துணை செயலாளர் எம்.கலைச்செல்வன் தீர்மானங்களை முன் மொழிந்தார். தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் சர்க்கரை ஆலையை உடனடியாக மீண்டும் இயக்குவதோடு, ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி யையும் வழங்க வேண்டும். மயிலாடு துறை மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை சீரமைத்து நவீனப்படுத்த வேண்டும். மாவட்டத்திலுள்ள நீர்நிலை களை பாதுகாக்க வேண்டும். மயிலாடு துறையில் புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். தியாகி.தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு நாளை அரசு விழாவாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தின் புதிய தலைவராக ஆர்.ரவீந்திரன், செயலாளராக ப.மாரி யப்பன், பொருளாளராக எம்.கலைச் செல்வன், துணைத் தலைவர்களாக ஆர்.ராமனுஜம், என்.பாரதிமோகன், வி.பேபி, ஜி.இளவரசன், துணைச் செய லாளர்களாக பி.சுந்தர், ராமலிங்கம், சி.பாலையா, லதா ஆகியோர் உட்பட 33 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகி களை அறிவித்து மாநிலச் செயலாளர் கே.விஜயன் நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ப.மாரியப் பன் நன்றி கூறினார்.