districts

img

உதவித்தொகையை உயர்த்தி வழங்குக! மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாடு கோரிக்கை

வேதாரண்யம், ஆக.6 - அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் 4-வது நாகை மாவட்ட மாநாடு  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் வில்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். மாநாட்டிற்கு ஏ.சிக்கந்தர் தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர் டி.வில்சன் துவக்க  உரையாற்றினார். சி.ராஜேந்திரன் சங்க கொடியை ஏற்றினார். மாநில துணைத்தலை வர் டி.கணேசன் வாழ்த்துரை வழங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்டத்திலிருந்து மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.