கும்பகோணம், பிப்ர.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு வருகிற ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்களை சந்தித்து சிபிஎம் குடந்தை மாநகரக்குழு சார்பில் நிதிசேகரிப்பு நடைபெற்றது. இதில், பொதுமக்கள் மனமுவந்து கொடுத்த நிதி, கட்சித் தோழர்கள் குடும்ப நிதி ஆகியவற்றை, ரூ.1 லட்சத்தை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினார்கள். உடன் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், நகரச் செயலாளர் செந்தில்குமார், கட்சியின் மூத்த தோழர்கள் ஆர். ராஜகோபாலன், ஆர்.சந்திரசேகரன், பழ. அன்புமணி உள்ளிட்டோர், ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.