மயிலாடுதுறை, டிச.20 - மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி பள்ளி மாணவர் ஒருவர் புதுதில்லியில் நடை பெற்ற சர்வதேச மன எண் கணித போட்டியில் இரண்டாவது பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். மயிலாடுதுறையில் இயங்கி வரும் சில்வர் ஜீப்ளி மெட்ரிக்குலேசன் (டார்கெட் கல்வி நிறுவனம்) மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் சஞ்சய்ராம். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மன எண் கணித பயிற்சி மேற்கொண்டு வரு கிறார். இந்நிலையில் கடந்த டிச.14, 15 தேதிகளில் புதுதில்லியில் உள்ள தில்லி யுனிவர்சிட்டி சார்பில் மன எண் கணித போட்டி (யுனிவர்சல் கான்செப்ட் ஆஃப் மெண்டல் அரித்மெடிக் சிஸ்டம்) சர்வதேச அளவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து 30 நாடு களைச் சேர்ந்த 6 ஆயிரம் போட்டியா ளர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாணவர் சஞ்சய் ராம், எட்டு நிமிடத்தில் 200 மனக்கணக்கு களுக்கு விடை அளிக்க வேண்டிய போட்டியில், 160 வினாக்களுக்கு விடை அளித்து, இரண்டாம் இடம் பெற்ற சாதனைப் படைத்துள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு பரிசு கோப்பையும் சான்றிதழும் வழங்கப் பட்ட நிலையில் வியாழனன்று மயிலாடு துறைக்கு வந்த மாணவர் சஞ்சய்ராம் மற்றும் அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாகமாக வர வேற்று, சால்வை அணிவித்து பாராட்டி பரிசுகளை வழங்கினர்.