districts

img

கயர்லாபாத்தில் ரூ.4.96 கோடி மதிப்பில் வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு

அரியலூர், பிப்.20- அரியலூர் அருகேயுள்ள கயர்லாபாத் ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், ரூ.4.96 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டச் செயல்முறை கிடங்கினை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணெலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதையடுத்து, அந்த கிடங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, கு.சின்னப்பா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பார்வையிட்டனர். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.மல்லிகா, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சாய் நந்தினி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜா, கட்டுமானப் பிரிவு உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், இளநிலை பொறியாளர் பாபு, வட்டாட்சியர் முத்துலெட்சுமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.