திருவாரூர், பிப்.20- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளத்தினையும் திறந்து வைத்தார். திருவாரூர் வட்டம், பழையவலம் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், மன்னார்குடி வட்டம், மேலவாசல் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், மன்னார்குடி வட்டம், ஆலத்தூர் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருத்துறைப்பூண்டி வட்டம், கற்பகநாதர்குளம் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருத்துறைப்பூண்டி வட்டம், 62.தோலி கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட 5 புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் ரூ.20.90 கோடி மதிப்பீட்டில் 33000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளத்தினை தமிழக முதல்வரால், காணொலி வாயிலாக திறப்பு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, செயற்பொறியாளர் குணசீலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.