அரியலூர், பிப்.20- சிபிஎம் அரியலூர் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம், ஜெயங்கொண்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. கந்தசாமி வரவேற்றுப் பேசினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், வி.தொ.ச.மாநில துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ், வி.தொ.ச மாநில பொருளாளர் அ.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அகில இந்திய மாநாட்டுக்கான தீக்கதிர் சிறப்பு சந்தா, அரியலூர் சார்பில் 25 சந்தாவும், திருமானூர் சார்பில் ஒன்று, ஜெயங்கொண்டம் 2, செந்துறை சார்பில் 2 என மொத்தம் 30 சந்தா தீக்கதிர் திருச்சி பதிப்பு மேலாளர் ஜெயபாலுவிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், வி.ச, வி.தொ.ச உறுப்பினர்கள் பதிவு பிப்ரவரி 22, 23 தேதிகளில் இயக்கம் தொடர்பாக திட்டமிடல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, ஒன்றியச் செயலாளர்கள், இடை கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், முன்னணி கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.பத்மாவதி நன்றி கூறினார்.