districts

img

கரூரில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதி: ரூ.10 இலட்சத்தை நெருங்கியது

கரூர்.பிப்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வருகின்ற ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதியிலிருந்து கட்சியின் எட்டு ஒன்றிய குழுக்களும், பொதுமக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களிடம் மாநாட்டு செய்தியை கூறி, வெகுஜன வசூல் இயக்கத்தை துவக்கின. 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வெகுஜன வசூலில், உண்டியல் வசூல் மூலம் ரூ.10 இலட்சம் வசூலாகியுள்ளது.  அகில இந்திய மாநாட்டு உண்டியல் வசூல் நிறைவு நிகழ்ச்சியாக மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா தலைமையில், கரூர் ஒன்றியம் வேலாயுதம் பாளையம் கடைவீதியில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட வசூல் நடைபெற்றது. 2 மணி நேரத்தில் ரூபாய் 20 ஆயிரத்து 800 வசூலானது. கரூர் ஒன்றியக் குழு ரூபாய் 2 இலட்சம் இதுவரை வசூல் செய்துள்ளது. கரூர் மாநகரம் ரூபாய் 1.5 இலட்சமும் குளித்தலை, கடவூர் ஒன்றிய குழுக்கள் ரூபாய் 1 இலட்சத்திற்கு அதிகமாகவும் க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, அரவக்குறிச்சி ஒன்றியக் குழுக்கள் ஒரு இலட்சத்தை நெருக்கியும் வசூல் செய்துள்ளனர்.  வெகுஜன நிறைவு வசூல் நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், பி.ராஜூ, கே.சக்திவேல், சி.முருகேசன், இரா.முத்துச்செல்வன், பி.ராமமூர்த்தி, சி.ஆர். ராஜாமுகமுது, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.கந்சாமி, ஆர். ஹோச்சிமின், கே.வி.கணேசன், எஸ்.பி. ஜீவானந்தம், எம். சுப்பிரமணியன், கே. சக்திவேல், எம். தண்டபாணி, எம். ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் ஜி. தர்மலிங்கம், எம். ஆறுமுகம், பூரணம், கே. சுப்பிரமணியன், கா. கந்தசாமி,  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்டத் தலைவர் சதீஷ், புகளூர் நகராட்சி 21 ஆவது வார்டு கவுன்சிலர் இந்துமதி, தொழிற்சங்கத் தலைவர் அரவிந்த், மாதர்சங்க நிர்வாகி சுமதி, சசிகலா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாராட்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், கரூர் மாவட்டப் பொறுப்பாளருமான  எஸ்.பாலா பேசுகையில், கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக வெகுஜன வசூல் அனைத்து ஒன்றியங்களிலும் ஒரே நேரத்தில் துவக்கப்பட்டு மிகச் சிறப்பாக நடத்தியதற்கும், வசூலில் ஈடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவித்தார். நிதி வழங்கிய பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் அனைவருக்கும் மாநில குழு சார்பில் நன்றி கூறினார். பேரணிக்கு 2000 பேர் காலையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஏப்ரல் 6 அன்று மதுரையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டு பேரணியில், கரூர் மாவட்டம் சார்பாக 2000 பேர் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஒன்றியங்களிலும் சுவர் விளம்பரம் உள்ளிட்ட விளம்பரத்திற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.