திருவள்ளூர், ஆக 17- இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வின் திருவள்ளூர் மாவட்ட 9 வது மாநாடு கும்மிடிப்பூண்டியில் தோழர் டி.என். நம்பிராஜன் நினைவரங் கத்தில் திங்களன்று (ஆக 15) நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார். சிஐடியுவின் கொடியை மூத்த உறுப்பினர் சி.ஆறுமு கம் ஏற்றி வைத்தார்.சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜ யன் தேசிய கொடியை ஏற்றினார்.மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சந்திரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் ஜி.சூரியபிரகாஷ், வரவேற்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன் வேலை அறிக்கையும், பொரு ளாளர் என்.நித்தியானந்தம் வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பித்த னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செய லாளர் பி.துளசி நாராயணன் வாழ்த்தி பேசினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
தீர்மானங்கள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் சூலூர்பேட்டை வரை ரயில் நான்கு வழி பாதையாக அமைக்க வேண்டும், உள்ளாட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும், வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும், விசைத்தறி நெசவாளர்க ளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் தொடர்ந்து பாவு வழங்க வேண்டும், அரசு நிர்ணயித்த கூலியை பெடல்தறி நெசவாளர்க ளுக்கு கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் சிறப்புரை யாற்றினார்.வரவேற்புக் குழு செயலாளர் கே.அர்ச் சுனன் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக கே.விஜயன், செயலாளராக கே.ராஜேந்திரன், பொருளாளராக என்.நித்தியானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.