districts

img

புதுக்கோட்டை, அரியலூரில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை/அரியலூர், ஏப்.23 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டியில் 8 மாடுபிடி வீரர்கள் உட்பட 25 பேர் காய மடைந்தனர். சங்கம்விடுதி நொண்டி முனியாண்டவர் கோயில் திரு விழாவை முன்னிட்டு நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாநிலங்க ளவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, திமுக வடக்கு  மாவட்டப் பொறுப்பாளர்கள் கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் கொடிய சைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700- க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தனர். காளைகளை அடக்குவதற்கு 300 மாடுபிடி வீரர்கள் கள மிறக்கப்பட்டனர்.  போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக் கும், மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டி யில் 8 மாடுபிடி வீரர்கள் உட்பட 25 பேர்  மாடு முட்டியதில் காயமடைந்தனர். அவர்க ளுக்கு அங்கு தயார்நிலையில் இருந்த மருத்து வக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்த னர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா  பார்த்திபன் தலைமையிலா  போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது. போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளை களும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து  கொண்டு களம் கண்டனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளை களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட் டன. இந்த புனித அந்தோணியார் ஆலய ஜல்லிக் கட்டு போட்டியை உடையார்பாளையம் கோட் டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.