districts

மதுரை முக்கிய செய்திகள்

மண்டபம் அருகே கடலில் வீசிய 20 கிலோ கடத்தல் தங்கம் மீட்பு  

இராமேஸ்வரம், பிப்.09-  இலங்கைக்கு தங்கம் கடத்தலை தடுக்க முயன்ற போது கடலில் வீசப்பட்ட 20 கிலோ தங்கத்தை இந்திய கட லோர காவல்படையின் நீர்மூழ்கி வீரர்கள் மீட்டனர். இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே மன்  னார் வளைகுடா கடலில் தங்கம் கடத்தல் நடைபெற  உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையின ருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் மண்டபம் அருகே புதன்கிழமையன்று கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சென்ற நாட்டுப்படகை நிறுத்த செல்லும் போது படகில் இருந்த பொருட்களை கடலில் தூக்கி வீசினர்.   இதனை கண்ட கடலோர காவல்படையினர் படகில்  இருந்த மண்டபத்தை சேர்ந்த நாகூர்கனி, அன்வர், மன்சூர்  அலி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களி டம் நடத்திய விசாரணையில் தங்கத்தை இலங்கைக்கு கடத்தவிருந்ததாகவும் அந்த தங்கத்தை கடலில் போட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து, இந்திய கடலோர காவல்படை யின் நீர் மூழ்கி வீரர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று  இரண்டு நாட்கள் தேடினர். இதில் பிப்ரவரி 9 வியா ழனன்று  முற்பகல் 20 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இந்த தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை யினர் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது.  மேலும் மூன்று பேரிடம் தனித்தனியாக  விசா ரணை நடத்தி வருகின்றனர்.


பத்திர எழுத்தர் உட்பட  2 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை, பிப்.9- அருப்புக்கோட்டை அருகே மற்றொருவர் நிலத்தை ஊராட்சிக்கு தானமாக பதிவு செய்து கொடுத்த பத்திர எழுத்தர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம், பொன்மேனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(54). இவருடைய மாமனாருக்கு சொந்த மான நிலம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிக் குறிச்சியில் இருந்துள்ளது. இந்நிலையில், அவரது நிலத்தை சென்னை, க்ழப்பாக்கம், ஆம்ஸ்ரோட்டைச் சேர்ந்த பவர் ஏஜென்ட் முத்துராஜன் மற்றும் பந்தல்குடி பத்திர எழுத்தர் இராஜகுரு ஆகியோர் சேர்ந்து செட்டிக்  குறிச்சி ஊராட்சிக்கு தானமாக பத்திரம் பதிவு செய்து வழங்கியுள்ளனர். எனவே, இதுகுறித்து பாலகிருஷ்ணன் பந்தல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.


ஜிடிஎன் கல்லூரியில்  அறிவியல் கண்காட்சி

திண்டுக்கல், பிப்.9- திண்டுக்கல் ஜிடிஎன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான 2023  அறிவியல் கண்காட்சி. நடைபெற்றது. இந்த கண்காட்சி யில் 146 பள்ளிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் 370 பேர் பங்கேற்று தாங்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் பார்வை யாளர்களுக்காக காட்சிப்படுத்தி இருந்தனர்.


பிப். 15 பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு: மாடுபிடிவீரர்கள், காளைகள் பதிவு செய்ய அழைப்பு

தேனி, பிப்.9- தேனி மாவட்டம், பாளையம் அருகே உள்ள பல்லவ ராயன்பட்டியில் வருகிற 15 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடை பெறும், மாடுபிடி வீரர்கள் ,காளைகளை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பல்லவ ராயன்பட்டியில் வல்லடிக்கார சுவாமி கோயில் திருவிழா வை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 15-ம்  தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் குறித்த விபரங்கள் https://theni.nic.in என்ற இணையதளத்தில் நேற்று முதல் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆகவே மாடுபிடிவீரர்கள் தங்களது புகைப்படம், வயது சான்றிதழ், கொரோனா தடுப்பூசி செலுத்தி யதற்கான சான்று ஆகியவற்றுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதே போல் மாட்டின் உரிமையாளரது புகைப்  படம், காளையின் உடல் தகுதிச்சான்று ஆகியவற்றையும் வரும் 11-ம் தேதி இரவு 8 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். காளைகள் மற்றும் மாடுபிடிவீரர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் கணினி குலுக்கல் மூலம் தேர்வு நடைபெறும் என்று ஆட்சியர் ஆர்வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


குவாரியில் கல் சரிந்ததில்  தொழிலாளி பலி

இராஜபாளையம், பிப்.9- இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில்   தனியார் கல்  குவாரி உள்ளது. இங்கு வெடி வைக்கப்பட்டுள்ளது.  வியா ழனன்று காலை குவாரியில் பணியாற்றும் தொழி லாளர்கள் பாறையின் உச்சியில் நின்று கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது திடீரென கற்கள் சரிந்ததில்  இளந்திரை கொண்டான் பகுதியை சேர்ந்த  மாரிக்கனி(50), தென்காசி  மாவட்டம் வலசை பகுதியை சேர்ந்த முத்துமாணிக்கம் (45),  சாமிராஜா(40) ஆகிய 3  பேரும் பாறை உச்சியில்  இருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்தனர்.  இந்த  விபத்தில் மாரிக்கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  படுகாயமடைந்த முத்துமாணிக்கம், சாமிராஜா ஆகிய இருவரும்  சிவகிரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர்.  உயிரிழந்த  மாரிக்கனி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோத னைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இந்த விபத்து  குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.